2003க்கு பிறகு நியூசிலாந்தை வெல்ல முடியுமா? – கில் கேட்ட கேள்விக்கு ரோகித் சர்மா அட்டகாசமான பதில்!

0
1009
Rohit

நாளை இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் நியூசிலாந்து அணியை இந்திய அணி தனது ஐந்தாவது ஆட்டத்தில் சந்திக்க இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் இது ஐந்தாவது ஆட்டமாகும்.

மேலும் இந்த இரண்டு அணிகளும் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கையும் வென்று இருக்கின்றன. தற்பொழுது ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதல் இடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் இடத்தில் வலிமையாக அமரும் என்பதை தாண்டி, இந்தப் போட்டியை வென்றால் அரை இறுதி வாய்ப்பை ஏறக்குறைய நெருங்கி விடலாம் என்று சொல்ல முடியும்.

இந்த காரணங்கள் மட்டுமில்லாமல் நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டி வேறு ஒரு காரணத்தாலும் முக்கியத்துவம் பெறுகிறது.

என்னவென்றால் இதுவரை 13 ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் சந்தித்து விளையாடி உள்ளன. இதில் இந்திய அணி மூன்று முறை மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. பத்து முறை நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கிறது. இறுதியாக 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை இந்தியா வென்று இருந்தது.

- Advertisement -

இந்திய அணியில் ஒரு வீடியோ தொகுப்புக்காக இளம் வீரர் சுப்மன் கில் எல்லா வீரர்களிடமும் சில கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி இருந்தார். தற்பொழுது இது பிசிசிஐ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கில் தன்னை பத்திரிகையாளர் சந்திப்பில் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை வென்றது இல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டதாகவும், இந்த முறை நியூசிலாந்து அணியை நம்மால் வெல்ல முடியுமா என்றும் ரோஹித் சர்மாவிடம் கேட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய ரோகித் சர்மா “அது உண்மைதான். நாம் அவர்களை வெல்லாமல் இருக்கிறோம். ஆனால் தற்போது நாம் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறோம். எங்களால் முடிந்தவரை செயல்பட முடியும் என்பதுதான் உண்மை.

நாங்கள் எதற்கும் உத்தரவாதம் அளிக்கும் கிரிக்கெட்டை விளையாட முடியாது. நாங்கள் மைதானத்தை அடையும் பொழுது நாங்கள் ஒரு குழுவாக என்ன செய்ய முடியும் என்பதை பற்றி மட்டுமே யோசிக்க முடியும். கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பதில் எந்த பயனும் கிடையாது!” என்று கூறியிருக்கிறார்!