“இவரை பாத்து வச்சுகோங்க..” 2023 ஐபிஎல்ல இவரை கோடிகளில் கொட்டி எடுப்பார்கள் – சக அணி வீரர் உறுதி!

0
1925

இளம் வீரர் கேமெரூன் கிரீன் அடுத்த 10 வருடங்களில் அதிக அளவில் பணம் ஈட்டுவார் என்று சக அணி வீரர் மிச்சல் மார்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணியின் இளம் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன், முதலில் டெஸ்ட் போட்டிகளுக்கு எடுத்துவரப்பட்டார். டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டதால் லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் விளையாட வைக்கப்பட்டார்.

- Advertisement -

2022ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான கிரீன், இந்திய அணியுடன் நடக்கும் டி20 தொடரில் இடம்பெறவில்லை. இடம்பெற்றிருந்த மிச்செல் மார்ஸ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கிரீன் உள்ளே வந்தார்.

நடந்து முடிந்த இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல்முறையாக துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். முதல் போட்டியில் 30 பந்துகளில் 61 ரன்கள் விலாசினார். ஆஸ்திரேலியா 208 ரன்கள் சேஸ் செய்து வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக இவர் இருந்தார். அப்போட்டியில் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். மூன்றாவது போட்டியில் 21 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். டி20 அணியில் இவரது இடம் கிட்டத்தட்ட உறுதி என்றே கூறலாம்.

இதுவரை விளையாடிய நான்கு டி20 போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் விலாசிய இவர் மீது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு மிகுந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது. டி20 உலக கோப்பையில் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதனை மறுபரிசீலனை செய்து, பிளேயிங் லெவனிலும் ஆடவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய மைதானத்தில் இப்படி அதிரடியாக விளையாடியதால், ஐபிஎல் அணிகள் நிச்சயம் இவர் மீது கவனம் செலுத்த துவங்கியிருக்கும். வருகிற ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டிசம்பர் மாதம் சிறிய அளவிலான ஏலம் நடத்தப்பட இருக்கிறது. அந்த ஏலத்தில் இவர் மிகப்பெரிய தொகைக்கு எடுக்கப்படுவார். மேலும் வெவ்வேறு நாடுகளில் உள்ள டி20 லீக் போட்டிகளில் முக்கியத்துவம் வாய்ந்த வீரராகவும் இருப்பார் என்று சக ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மிச்சல் மார்ஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

“23 வயதாகும் கேமரூன் கிரீன் அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகில் அதிக அளவிலான பணத்தை ஈட்டுவார். ஐபிஎல் அணிகள் இவரை எடுப்பதற்கு போட்டி போடும். வருகிற ஐபிஎல் தொடரில் நிச்சயம் பல கோடிகளுக்கு ஏலம் போவார். அவரிடம் இருந்து நானும் சில விஷயங்களை பெற்றுக்கொள்ள நினைக்கிறேன். அதீத திறமை மற்றும் டெக்னிக் வைத்திருக்கிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.” என்று பெருமிதமாக பேசினார்.