முக்கிய வீரர் காயத்தினால் விலகல்; இந்தியாவை புரட்டியெடுத்த வீரருக்கு டீமில் இடம்கொடுத்துள்ள ஆஸ்திரேலியா!

0
15286

ஆஸ்திரேலியா உலகக் கோப்பை அணியில் காயம் காரணமாக விலகிய ஜோஸ் இங்கிலீஷ் க்கு மாற்று வீரராக கேமரூன் கிரீன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பை டி20 தொடரில் சூப்பர் 12 சுற்றுக்கு முன்பாக நடைபெறும் தகுதிச்சுற்று கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. குரூப் இரண்டில் ஸ்ரீலங்கா மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டனர். குரூப் 1ல் கடைசி கட்ட ஆட்டம் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

- Advertisement -

அக்டோபர் 22 ஆம் தேதி துவங்கும் சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டியாக ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இடம்பெற்று இருந்த ஜோஸ் இங்கிலீஷ் வெளியே கோல்ப் ஆட்டத்தில் ஈடுபடும்போது காலில் ஏற்பட்ட பிசுக்கு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.

தற்போது அவர் குணமடைவது கடினம்; இன்னும் சில நாட்கள் எடுக்கும் என்று அணியின் மருத்துவ குழுவினர் தெரிவித்திருக்கின்றனர். இதனால் அவரை உலகக்கோப்பை அணியில் இருந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் விலக்கியது.

- Advertisement -

அவருக்கு மாற்று வீரராக 23 வயதான கேமரூன் கிரீன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மூத்த வீரர் டேவிட் வார்னர் இடம்பெறவில்லை. ஆல்ரவுண்டர் வரிசையில் ஆறாவது அல்லது ஏழாவது வீரராக களம் இறங்கி வந்த கேமரூன் கிரீன், அந்த தொடரில் துவக்க வீரராக களம் இறக்கப்பட்டார். இது ஆஸ்திரேலியா அணிக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

30 பந்துகளில் 61 ரன்கள், 27 பந்துகளில் மற்றொரு அரைசதம் என இரண்டு அரைசதங்களை அடித்து மீண்டும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறார். ஆகையால் இவரை அணி நிர்வாகம் கருத்தில் கொண்டு ஆலோசனை நடத்திய பிறகு, தற்போது மாற்று வீரராக அறிவித்திருக்கிறது.

உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணி:

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மாட்தீனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

- Advertisement -