ICC ரேங்கிங்.. பும்ரா யாரும் செய்யாத சாதனை.. உலக கிரிக்கெட்டில் முதல் வீரர்

0
171
Bumrah

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

2023-2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இரு அணிகளுக்குமே இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது. இதில் தோற்கும் அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்புகள் குறையும். குறிப்பாக இங்கிலாந்துக்கு அதிகம் குறையும்.

- Advertisement -

தற்பொழுது இந்த தொடரில் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்த இரண்டு மைதானத்தின் ஆடுகளங்களும் வழக்கமான சுழல் பந்துவீச்சு சாதகமான ஆடுகளங்களாக இல்லை. மேலும் வேகப்பந்துவீச்சுக்கும் ஒத்துழைக்கும் ஆடுகளங்களாக இல்லை.

இப்படியான நிலையில் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பரித் பும்ரா தன்னுடைய அபார வேகப்பந்துவீச்சு திறமையை பயன்படுத்தி முதல் டெஸ்டில் ஆறு விக்கெட்டுகள் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒன்பது விக்கெட்டுகள் என மொத்தம் 15 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

இந்திய சூழ்நிலையில் பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். இதைப் பெரிய அளவில் ஜேம்ஸ் ஆண்டர்சனே பயன்படுத்த முடியாத நிலையில், பும்ரா மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தி இங்கிலாந்தை இரண்டாவது டெஸ்டிங் முதல் இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக சீர்குலைத்தார். மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஸ்வாலை தாண்டி ஆட்டநாயகன் விருது வாங்கினார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது அவர் ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் 881 புள்ளிகள் உடன் முதல்முறையாக முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார். மேலும் பத்து இடங்களில் மூன்றாவது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஒன்பதாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்ததின் மூலம், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்த முதல் பந்துவீச்சாளர் என்கின்ற சாதனையை பும்ரா படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக அவர் மற்ற இரண்டு வடிவங்களிலும் முதல் இடங்களில் இருந்திருக்கிறார். தற்பொழுது மூன்று வடிவத்திலும் முதல் இடத்தை பந்துவீச்சாளராக பிடித்த முதல் வீரராக மாறி இருக்கிறார்.

இதையும் படிங்க : WTC புள்ளி பட்டியல்.. இந்தியாவுக்கு சிக்கலை உண்டாக்கிய தெ.ஆ கிரிக்கெட் போர்டு.. அதிரடி மாற்றங்கள்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள் :

ஜஸ்பரித் பும்ரா
ககிசோ ரபாடா – 851
ரவிச்சந்திரன் அஷ்வின் – 841
பாட் கம்மின்ஸ் – 828
ஜோஷ் ஹேஸ்ல்வுட் – 818
பிரபாத் ஜெயசூரியா – 783
ஜேம்ஸ் ஆண்டர்சன் – 780
நாதன் லியோன் – 746
ரவீந்திர ஜடேஜா – 746
ஒல்லி ராபின்சன் – 746