“பும்ரா சமி சிராஜ்.. இவங்களுக்கு எதிரா நாங்க விளையாடாதது எங்க அதிர்ஷ்டம்!” – ஸ்ரேயாஸ் ஐயர் சுவாரசியமான பேச்சு!

0
1806
Shreyas

இந்திய அணி ஆசியக் கோப்பை தொடருக்கு வந்ததிலிருந்து வேறு ஒரு தளத்தில் இருக்கிறது. இந்திய அணியின் மூன்று துறைகளும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் வெள்ளைப் பந்து தொடர்கள் இந்திய அணி எதிர்பார்த்த அளவுக்கு மிகச் சிறப்பாக அமையவில்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

அந்த நேரத்தில் இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட்டின் மீது இந்திய ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. மேலும் இந்திய அணி நிர்வாகத்தின் மீதும் இந்திய அணி வீரர்களின் மீதும் நிறைய விமர்சனங்களும் இருந்தது.

ஆனால் ஆசியக் கோப்பை தொடரின்பொழுது இந்திய அணியில் காயம் அடைந்திருந்த முன்னணி வீரர்கள் அனைவரும் திரும்பிய பிறகு, இந்திய அணி வேறு ஒரு வடிவத்தில் செயல்பட ஆரம்பித்தது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

குறிப்பாக வேகப்பந்துவீச்சில் பும்ரா வந்து சேர்ந்த பிறகு, அவர் சமி மற்றும் சிராஜ் இருவரையும் இணைக்கும் ஒரு சிறந்த சங்கிலியாக பந்துவீச்சு இருக்கிறார். இவர்கள் மூவரும் சேரும் பொழுது அந்தக் கூட்டணி மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டிக்குப் பிறகு பேசிய ஸ்ரேயாஸ் இதுகுறித்து கூறும் பொழுது “முந்தைய மற்றும் நடப்பு ஆட்டங்களில் எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகளை பார்க்கும் பொழுது, நாங்கள் இவர்களுக்கு எதிராக விளையாடாதது எங்களின் அதிர்ஷ்டம்தான் என்று சொல்ல வேண்டும்.

ஆனாலும் கூட நாங்கள் இவர்களை வலைகளில் எதிர்த்து விளையாடி தான் வருகிறோம். இதன் காரணமாக நாங்கள் வெளியில் வந்து யாரையும் எதிர்த்து விளையாட முடிவது வசதியாகி விடுகிறது.

தற்போதைய பந்துவீச்சு தாக்குதல் மிக அழகாக இருக்கிறது. ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியின் போது நான் விளையாடாமல் வெளியில் இருந்தேன். தற்பொழுது உள்ளே இருந்து பார்க்கும் பொழுதுதான் அதை முழுவதுமாக உணர முடிகிறது.

ஒன்று இரண்டு விக்கெட்டுகளை பெற்ற பிறகு எங்களது பந்துவீச்சாளர்கள் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு துல்லியமாக தாக்குகிறார்கள். இது மிகச் சிறப்பாக இருக்கிறது.

மேலும் ஒரு பவுலிங் யூனிட் ஆக மட்டும் இல்லாமல், எங்களுடைய ஃபீல்டிங் யூனிட்டும் மிகச் சிறப்பாக பவுலர்களுக்கு ஒத்துழைக்கிறது. அவர்கள் உருவாக்கும் வாய்ப்பை நாங்கள் சரியாக எடுத்துக் கொள்கிறோம். முன்பே சொன்ன மாதிரி இந்த அணி மனரீதியாக மிகவும் சரியாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!