2025 ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்று ஆசிய கோப்பை இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது. இந்த வெற்றி குறித்து இந்தியன் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசி இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்தது. கடந்த போட்டியில் இந்திய அணிக்கு விளையாடாத வருண் சக்கரவர்த்தி மற்றும் பும்ரா இருவரும் மீண்டும் வந்தார்கள்.
கைநழுவிய கேட்ச் வாய்ப்புகள்
இதை தொடர்ந்து விளையாட வந்த பாகிஸ்தான் அணிக்கு இந்திய வீரர்கள் தொடர்ந்து எளிய கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டார்கள். இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் உற்சாகம் பெற்று அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். ஆட்டக்காரர் பர்கான் 45 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. குல்தீப் இரண்டு விக்கெட் கைப்பற்ற, பும்ரா அதிகபட்சமாக 45 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் 10 ஓவர்களில் பார்ட்னர்ஷிப் கிடைத்தது. கில் 28 பந்துகளில் 47 ரன்கள், அபிஷேக் ஷர்மா அதிரடியாக 39 பந்துகளில் 74 ரன்கள் குவித்தார்கள். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 19 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நீரும் நெருப்பும் போன்றவர்கள்
இந்த வெற்றி குறித்து பேசி உள்ள இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறும் பொழுது “எங்களுடைய வீரர்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் முன்னேறும் விதத்தில் என்னுடைய வேலை குறைந்து விடுகிறது. வீரர்கள் அருமையான குணத்தை வெளிப்படுத்தினார்கள். பத்து ஓவர்களுக்கு பிறகு எங்கள் வீரர்கள் அமைதியாக இருந்தார்கள். அப்போது கூல் ட்ரிங்க்ஸ் இடைவேளையில் இப்போதுதான் போட்டி தொடங்குகிறது என்று நான் அவர்களிடம் சொன்னேன்”
இதையும் படிங்க : 171 ரன்.. யுவராஜ் தோனி சாதனையை உடைத்து.. கில் அபிஷேக் ஷர்மா அசத்தல் பேட்டிங்.. பாகிஸ்தான் அணி படுதோல்வி
“பும்ராவுக்கும் ஒரு மோசமான நாள் இருக்கவே செய்யும். அவர் ஒன்றும் ரோபோ கிடையாது. சிவம் துபே எங்களை அந்த சூழ்நிலையில் இருந்து மீட்டு எடுத்தார். கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஒருவரை ஒருவர் நன்றாக பூர்த்தி செய்து கொள்கிறார்கள். இந்த காம்பினேஷன் நீரும் நெருப்பும் போன்றது. இன்று நாங்கள் பந்து வீசி முடித்ததும் எங்கள் பீல்டிங் பயிற்சியாளர் திலீப் விரல்களில் வெண்ணை தடவிக் கொண்டு வந்த எங்கள் வீரர்களுக்கு ஈமெயில் அனுப்பி இருக்கிறார்” என்று நகைச்சுவையாக கூறி முடித்திருக்கிறார்.






