இன்று நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணியில் தலா இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது.
பாகிஸ்தான் ரன் குவிப்பு
முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பகார் ஜமான் 9 பந்துகளில் 15 ரன்கள், சிறப்பாக விளையாடிய பர்கான் 45 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து சையும் ஆயுப் 17 பந்தில் 21 ரன்கள், முகமத் நவாஸ் 19 பந்துகளில் 21 ரன்கள், பாஹிம் அஷ்ரப் ஆட்டம் இழக்காமல் 8 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினார்.
பட்டையை கிளப்பிய பஞ்சாப் ஜோடி
இதைத்தொடர்ந்து இந்திய அணிக்கு தொடக்கம் தர வந்த அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சேர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கி முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 105 ரன்கள் எடுத்தார்கள். சுப்மன் கில் 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் உடன் 47 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 24 பந்துகளில் அரை சதம் அடித்து 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உடன் 74 ரன்கள் குவித்தார். இந்த பஞ்சாப் ஜோடி முதல் 10 ஓவரிலேயே இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து திலக் வர்மா ஆட்டம் இழக்காமல் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க, இந்திய அணி 19 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி ஆரம்பிக்க வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : செம லக்.. எப்படி ஆடறதுனு முடிவு பண்ணியாச்சு.. நேத்தே அந்த முக்கியமான விஷயத்தை பார்த்துட்டோம் – சூரியகுமார் பேச்சு
இந்தியா – பாகிஸ்தான் அணிக்கான அதிகபட்ச டி20 பார்ட்னர்ஷிப்:
113 – கோலி/ஹார்திக் (மெல்போர்ன், 2022)
105 – அபிஷேக்/கில் (துபாய், 2025)*
97 – யுவராஜ்/தோனி (அகமதாபாத், 2012)






