“பும்ரா என்னை விட பாகிஸ்தானின் எல்லா பவுலர்களையும் விட சிறந்தவர்.. காரணம் இதுதான்!” – வாசிம் அக்ரம் வெளிப்படையான மிகப்பெரிய பாராட்டு!

0
6566
Akram

நேற்று இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக முதலில் பேட்டிங் செய்து 229 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய பேட்டிங் யூனிட் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது தடுமாறுகிறது என்று ரசிகர்கள் நினைத்து இருந்தார்கள். ஆனால் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு அவ்வளவு எளிதாக இல்லை என்பதுதான் உண்மை.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது இங்கிலாந்து பேட்டிங் செய்ய வந்த பொழுது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் சமி இருவரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை மொத்தமாக செயல்பட விடாமல் தடுத்து விட்டார்கள்.

நேற்று இவர்கள் இருவரும் 15 ஓவர்களுக்குள் வீசி 60 ரன்கள் கூட தராமல் ஏழு விக்கெட்டுகளை அதிரடியாக கைப்பற்றி, இந்திய அணிக்கு 100 ரன்கள் வித்தியாசத்தில் மிக பிரம்மாண்டமான வெற்றியை கொண்டு வந்து, முதல் அணியாக அரையிறுதிக்குள் அனுப்பியிருக்கிறார்கள்.

இதில் பும்ராவின் பவுலிங் சிறப்பு பற்றி பேசி உள்ள வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” பும்ரா இப்பொழுது உலகின் மிகச்சிறந்த பவுலர். அவரிடம் பந்துவீச்சு கட்டுப்பாடு மற்றும் வேகத்தில் மாறுபாடு என எல்லாம் துல்லியமாக இருக்கிறது. புதிய பந்தில் அவரிடமிருந்து வெளிப்படும் செயல்பாடு அவரை ஒரு முழுமையான பந்துவீச்சாளர் என்று சொல்ல வைக்கிறது.

- Advertisement -

பும்ரா ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து இடதுகை பேட்ஸ்மேனுக்கு பந்தை சீமில் அடிக்கும் பொழுது, கிரீசில் வைடாக இருந்து வீசும் பொழுது, பந்து உள்ளே வருகிறது என்று பேட்ஸ்மேன் நினைப்பார். ஆனால் பந்து உள்ளே வராமல் விலகி வெளியே செல்லும்.

இதே மாதிரி வலது கை பேட்ஸ்மேன் களுக்கு புதிய பந்தில் அவர் அவுட் ஸ்விங்கர்களை வீசும் பொழுது, என்னால் கூட அவ்வளவு துல்லியமான கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியவில்லை. நிச்சயமாக பும்ரா என்னை விட மிகச் சிறந்த கட்டுப்பாட்டை புதிய பந்தில் வைத்திருக்கிறார்.

புதிய பந்தில் அவர் பந்து வீசும் லென்த் பேட்ஸ்மேன்களுக்கு நிச்சயமற்ற ஒரு தன்மையை உருவாக்குகிறது. பும்ராவுக்கு அழுத்தம் கொடுக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அவருடைய பவுலிங் ஸ்பைஸ்ளை திருடுவதுதான். வேறு எந்த வழியும் கிடையாது.

பாகிஸ்தான் பவுலர்களை விடவும் பும்ரா ஏன் ஆபத்தானவர் என்றால், அவர் அதிகம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுகிறார். அதே நேரத்தில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அதிகம் நீண்ட வடிவ கிரிக்கெட்டில் விளையாடுவது இல்லை!” என்று கூறியிருக்கிறார்!