“பும்ரா நான் உங்களை விட சிறந்தவன்” – 17 வயது தென் ஆப்பிரிக்க அண்டர்19 உலககோப்பை பவுலர் சவால்

0
274

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் ஒரு போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.

நேற்று துவங்கிய இந்த உலகக்கோப்பை தொடரில் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இந்தியா அணிகள் மோதிக்கொண்டன.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 285 ரன்கள் எடுத்தது. இதற்கடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியை தன்னுடைய சிறப்பான பவுலிங் திறமையால் க்வேனா மபாகா இன்னும் 17 வயது தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் சரித்து தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி பெற்று தந்தார்.

நடந்து முடிந்த அந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக பதிவு செய்ய அவர் வெறும் 38 ரன்கள் மட்டும் தந்து முதலில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்பு வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றியை எட்டக்கூடிய தொலைவுக்கு வந்த பொழுது, பந்துவீச்சுக்கு வந்து மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியை வெற்றி பெற வைத்தார்.

இவருடைய பிக்கெட் வெற்றி கொண்டாட்டம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவின் ” எனக்குத் தெரியாது” என்பது போலான இரண்டு கைகளையும் விரித்திருக்கும் வகையில் அமைந்தது.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள அந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் கூறும் பொழுது “உலகக் கோப்பைக்கு முன்பாக விக்கெட் எடுத்தாள் அதை எப்படி கொண்டாடுவது என்று என்னுடைய சகோதரரிடம் கேட்டேன். அவரதற்கு எனக்குத் தெரியாது எந்த ஐடியாவும் இல்லை என்று சொன்னார். நான் அந்த எனக்குத் தெரியாது என்று அவர் சொன்னதையே என்னுடைய வெற்றி கொண்டாட்டமாக எடுத்துக் கொண்டேன்.

இந்த உலகக் கோப்பையை தொடங்குவதற்கு இது சிறந்த முறையாக அமைந்திருக்கிறது. எங்களுக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இப்படிப்பட்ட செயல் திறனுக்காக நாங்கள் காத்திருந்தோம். அது இன்று வெளிவருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் சிலவற்றை எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் அந்த இளைஞர் பும்ரா பற்றி கூறும்பொழுது ” உம்ரா நீங்கள் சிறந்த பந்துவீச்சாளர். ஆனால் நான் உங்களை விட சிறந்தவன் என்று நம்புகிறேன்” என்று மிகவும் தன்னம்பிக்கையுடன் பேசி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.