“தென் ஆப்பிரிக்காவில் எனக்கு பும்ரா ஒரு வேலை கொடுத்தார்.. காரணம் இதான்” – முகேஷ் குமார் சிறப்பு பேட்டி

0
115
Bumrah

இந்திய அணிக்கு பவுலிங் யூனிட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வீரர்களில் தற்பொழுது முக்கியமானவராக இருப்பவர் வலது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார்.

30 வயதாகும் பெங்கால் மாநில கிரிக்கெட் அணிக்கு விளையாடி இந்திய அணிக்கு தேர்வாகிய இந்த வலது கை வேகப்பந்துவீச்சாளர், குறிப்பிட்ட லென்த்துகளில் சலிப் இல்லாமல் பேசக்கூடியவர். இதனால் எதிரணிக்கு ரன் அழுத்தத்தை இவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக உருவாக்க முடியும்.

- Advertisement -

அதேசமயத்தில் இவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் மிகச்சிறப்பாக யார்க்கர் வீசக்கூடியவர். தொடர்ச்சியாக இவரால் 6 பந்துகளையும் அப்படி வெற்றிகரமாக வீச முடிகிறது.

இதன் காரணமாக இவர் இந்திய டி20 அணியில் தற்போது தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற்று வருகிறார். சிறப்பு பந்துவீச்சாளராக கருதப்படும் இவருக்கு, எதிர்காலத்தில் இந்திய அணியில் நல்ல இடம் இருக்கிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணி விளையாடியது. அப்பொழுது ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக இவர் அறிமுகமாகி சாதனை படைத்தார்.

இந்த நிலையில் தன் யார்க்கர்கள் பற்றி பேசிய முகேஷ் குமார் ” பும்ரா பாய் தான் எனக்கு யார்க்கர் பற்றி நிறைய அறிவுரை தருகிறார். நான் யார்க்கரை நன்றாக வீசுவதாகவும், நான் செய்து கொண்டிருப்பதை தொடர்ந்து செய்யவும் அவர் என்னை ஊக்கப்படுத்துகிறார். தங்கள் தவறாமல் தொடர்ந்து ஆலோசனை செய்வோம். அவர் எனக்கு நிறைய ஐடியாக்கள் தருவார். உண்மையில் அவை விலைமதிப்பற்றவை.

பந்துவீச்சில் எல்லோருக்கும் தனித்தனி ரோல் இருக்கிறது. நான் பெங்கால் அணிக்காக விளையாடும் பொழுது ஆகாஷ் தீப் மற்றும் இஷான் போரல் ஆகியோருடன் இணைந்து பேசி செயல்படுவோம்.

இந்திய அணியும் அதேபோல் எங்கள் பங்கை நாங்கள் விவாதிக்கிறோம். யார் மெய்டன் ஓவர்கள் வீசுவதில் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்கிறோம். கேப் டவுனில் நடந்த டெஸ்டின் போது பும்ரா பாய் என்னை அதிகம் டாட் பந்துகள் வீசச் சொன்னார். எனக்கு தென் ஆப்பிரிக்காவுக்கு ரன் அழுத்தம் உண்டாகும் வேலை கொடுக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -