ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் நடுவில் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே ஐபிஎல் களம் மிகவும் சூடாக காணப்படுகிறது.
காரணம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹரிதிக் பாண்டியா சந்தேகத்திற்கு இடமான முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டு இருப்பதுதான்.
மேலும் இது நடந்து கொண்டிருக்கும் பொழுது சமூக வலைதளத்தில் பும்ரா “சில நேரங்களில் மௌனம் மிகச் சிறந்த பதில்!” என்பதான ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார்.
ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் வருகை பும்ராவை காயப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.ஏனென்றால் அவர் அடுத்த கேப்டனாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது. ஆனால் தற்பொழுது ஹர்திக் பாண்டியாவை அடுத்த கேப்டன் என்று மும்பை வட்டாரங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “பும்ராவை போல ஒரு கிரிக்கெட் வீரரை மீண்டும் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. எந்த வடிவ கிரிக்கெட்டாக இருந்தாலும் அவர் எல்லாவற்றையும் அணிக்காக கொடுக்கக் கூடியவர். உலகக்கோப்பையிலும் அதை நாம் பார்ப்போம்.
ஏற்கனவே பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். எனவே தற்பொழுது ஹர்திக் பாண்டியா அடுத்த கேப்டன் என்கின்ற முறையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்து இருப்பது பும்ராவை காயப்படுத்தி இருக்கலாம். அவர் இதற்காக வருத்தப்பட்டு இருக்கலாம்.
இப்போது திரும்பி வந்த ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மிகச் சிறந்த ஒரு விஷயம் போல கொண்டாடுவது அவரை மிகவும் வருத்தப்பட வைத்திருக்கும். இது நியாயம் இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம்.
சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு இதுதான் நடந்தது. ஆனால் கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்து வைத்தது. எனக்கும் இப்படி ஏதாவது நடந்தால் நான் நிச்சயம் காயப்படுவேன்.
நான் குஜராத்தை சேர்ந்தவன் நானாவது குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்திருக்கலாம் என்று பும்ரா நினைத்திருக்கலாம். ஏதோ நிச்சயம் நடந்திருக்க வேண்டும். பும்ரா மிகச்சிறந்த மனிதன். அவர் எதுவும் இல்லை என்றால் வருத்தப்படக்கூடிய நபர் கிடையாது!” என்று கூறி இருக்கிறார்!