“பும்ராவுக்கு ஷாகின் அப்ரிடி 25% கூட கிடையாது.. அவர் உலகம் முழுசா சாதிச்ச ஆளு!” – சல்மான் பட் அதிரடியான கருத்து!

0
4272
Bumrah

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தன்னுடைய முக்கிய போட்டிக்கு வந்துவிட்டது. உலகக் கோப்பையின் இறுதி போட்டிக்கு என்ன எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்குமோ அது நாளைய இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு இருக்க போகிறது!

இந்த உலகக் கோப்பை தொடருக்கும் முன்பாக இந்திய அணி ஆசியக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக,பாகிஸ்தான் ஒரு செட்டில் செய்யப்பட்ட அணி, ஆனால் இந்தியா இன்னும் செட்டில் ஆகாத ஒரு அணி என்று பல வீரர்களால் சொல்லப்பட்டது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயத்தில் இருந்து அப்பொழுதுதான் அணிக்குத் திரும்பி இருந்தார்கள். இந்த காரணங்களால் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மீதான நம்பிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இதற்கு ஏற்றார் போல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாப் ஆர்டர் மொத்தமாக சரிந்தது. ஆனால் இதற்கு அடுத்த போட்டிகளில் இந்திய அணி தன்னுடைய மொத்த முக்கிய வீரர்களையும் கொண்டு களம் இறங்கி அசரடித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா, இறுதிப் போட்டியில் இலங்கையை 50 ரன்கள் சுருட்டி மற்றும் ஒரு வரலாற்று வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதற்கு அடுத்து உலகக் கோப்பையின் தன்னுடைய முதல் போட்டியில் வலிமை மிகுந்த ஆஸ்திரேலியா அணியை அனாயசமாக சுருட்டி அற்புதமான பேட்டிங் மூலம் மிக எளிமையாக வென்றது. இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தானை இந்திய அணியின் மதிப்பிற்குரிய முறையில் 35 ஓவர்களில் போட்டியிலிருந்து வெளியே அனுப்பியது.

- Advertisement -

இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பையில் ஒரே வருத்தத்துக்குரிய விஷயமாக இந்த ஆண்டு முழுவதும் மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருந்த சுப்மன் கில் கடைசி நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விளையாட முடியாமல் போனதுதான் இருந்தது. தற்பொழுது அவரும் நாளைய போட்டிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறும்பொழுது ” கில் மாதிரியான ஒரு வீரர் சில நாட்கள் வெளியே அமர்ந்து தன்னுடைய ஃபார்மை இழக்க மாட்டார். அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. அவருக்கு ஏதாவது சிறு பலவீனங்கள் இருந்திருந்தாலும் அதை பயிற்சியில் சரி செய்து இருப்பார்.

கில் திரும்பினால் அது இந்தியாவுக்கு மிகப் பெரிய சாதகமான விஷயமாக இருக்கும். அவர் கடந்த 18 மாதங்களில் இந்திய அணிக்கு மிக முக்கியமான உறுப்பினராக இருந்திருக்கிறார். மற்றவர்களை விட அதிக ரன் எடுத்து, இந்திய அணிக்கு வெற்றிக்கான ரன்களை அதிகம் எடுத்த வீரராக இருந்திருக்கிறார்.

பும்ரா மற்றும் ஷாகின் அப்ரிடி இருவரையும் எப்படி மக்கள் ஒப்பிடுகிறார்கள்? என்று புரியவில்லை. பும்ராவின் கிரிக்கெட்டில் ஷாவின் இன்னும் 25 சதவீதம் கூட விளையாடவில்லை.

பும்ரா மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் உலகம் முழுவதும் விளையாடி இருக்கிறார். அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்படியான ஒரு மூத்த பந்துவீச்சாளர் உடன் எப்படி ஷாகினை ஒப்பிடலாம்? ஷாகின் ஒரு அற்புதமான திறமைசாலி. ஆனால் அவர் பும்ரா விளையாடிய போட்டிகளில் பாதியையாவது விளையாட அனுமதிக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!