4வது டெஸ்ட்.. இந்திய அணியின் ஹீரோ ராஞ்சி வரவில்லை.. பெரிய பின்னடைவு

0
680
Bumrah

இந்திய அணி தற்போது உள்நாட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடுகிறது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணியும் வென்று தொடர் சமநிலையில் இருக்க, குஜராத் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமான வெற்றி பெற்றுதொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இரண்டு நாட்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு, கடைசி இரண்டு நாட்களில் கொஞ்சம் சரியாக செயல்படாமல் தோல்வியை சந்தித்து இருந்தது.

இதற்கு அடுத்து இரண்டாவது போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு முக்கியமான வீரர்கள் இல்லாத நிலையில், இந்திய அணி அபாரமான முறையில் திரும்ப வந்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பும்ரா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இருந்தார்கள். பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் தன்னுடைய பெரிய புத்திசாலித்தனத்தை காட்டியிருந்தார். ஆண்டர்சன் பந்துவீச்சில் எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை.

- Advertisement -

அதேபோல் ஜஸ்பிரித் பும்ரா ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சில் இங்கிலாந்து அணியை மிரட்டி இருந்தார் இதன் காரணமாக இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஜெய்ஸ்வால், கில், குல்தீப் யாதவ், சர்பராஸ் கான் என ஏறக்குறைய எல்லோரும் சேர்ந்து இந்திய அணியை வெல்ல வைத்திருந்தார்கள்.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வால பார்த்து பேசுப்பா.. பாண்டிங் ஹைடன பார்த்திருக்கியா?” – டக்கெட்டுக்கு மைக்கேல் கிளார்க் பதிலடி

தற்போது இந்திய அணி வீரர்கள் மூன்றாவது போட்டி நடைபெறும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு சென்று சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் 23ஆம் தேதி போட்டி துவங்க இருக்கும் நிலையில், இன்னும் மூன்று நாட்களே இருக்க, இந்திய அணி உடன் பும்ரா இணையவில்லை. அவர் ராஞ்சிக்கு இந்திய அணி உடன்விமானத்தில் வரவில்லை. எனவே அவருக்கு நான்காவது டெஸ்டில் ஓய்வு கொடுக்கப்படுகின்ற செய்தி உண்மை என்பதாக அரசல் புரசலாக தெரிய வருகிறது. அவர் இல்லாதது தற்பொழுது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.