ஐபிஎல் 2025

அவங்க கிட்ட இந்த வேலையை வச்சுக்கோங்க.. என்கிட்ட வேணாம்.. ஜெயவர்த்தனாவை புறக்கணித்த பும்ரா.. என்ன நடந்தது?

நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பும்ரா வெளிப்படையாக தலைமை பயிற்சியாளர் பேச்சைக் கேட்க முடியாது என்று சொன்னது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது. அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சேர்ந்து சிறப்பான முறையில் விளையாட மும்பை இந்தியன்ஸ் தரப்புக்கு பயம் தொற்றிக் கொண்டது.

ஹர்திக் பாண்டியாவின் பலவீனம்

பொதுவாக ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பொழுது வெளியில் இருந்து யாரும் வந்து தொடர்ந்து யோசனைகளை சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். களத்தில் என்ன சூழ்நிலையோ அதற்கு தகுந்தது போல ரோஹித் சர்மாவே பந்துவீச்சாளர்களை மாற்றுவது மற்றும் பீல்டிங் செட்டப் செய்வது என எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.

இந்த நிலையில் நேற்றைய எலிமினேட்டர் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவின் ஆன்பீல்டு கேப்டன்ஷியில் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் தலைமை பயிற்சியாளர் மகேல ஜெயவர்த்தனே, பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் லஷீத் மலிங்கா ஆகியோருக்கு திருப்தி இல்லை. இதன் காரணமாக அவர்கள் பௌண்டரி எல்லைக்கு வந்து தொடர்ந்து தங்களுடைய யோசனைகளை சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

- Advertisement -

புறக்கணித்துவிட்ட பும்ரா

ஹர்திக் பாண்டியா உள் வட்டத்தில் பீல்டிங்கில் இருந்தாலும் அல்லது பந்து வீட்டில் இருந்தாலோ ஜெயவர்த்தனே தனது ஆலோசனைகளை மிச்சல் சான்ட்னர் மாதிரியான வெளிவட்ட பீல்டர்களிடம் சொல்லி அனுப்பி கொண்டு இருந்தார். இந்த நிலையில் பவுண்டரி எல்லையில் இருந்த பும்ராவிடமும் அவர் வந்தார். இந்த இடத்தில் தான் பரபரப்பான சம்பவம் நடைபெற்றது.

இதையும் படிங்க : களத்தில் மோதிக்கொண்ட ஹர்திக் பாண்டியா கில்.. திடீர் பகைக்கு காரணம் என்ன.. உண்மையில் என்ன நடந்தது?

அப்போது ஜெயவர்த்தனா பும்புராவிடம் போட்டி குறித்த ஐடியாக்களை சொல்ல ஆரம்பித்தார். ஆனால் பும்ரா அவரை சொல்ல விடாமல் கையை கும்பிடுவது போல காட்டி என்னால் முடியாது என்னிடம் சொல்லாதீர்கள் என்று வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும், நீங்கள் வேண்டுமானால் மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளுங்கள் என்பது போல இருந்தது. பொதுவாக பும்ரா இப்படி நடந்து கொள்ள மாட்டார் என்பதால் இந்த விஷயம் மிகப் பெரிதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -
Published by