களத்தில் மோதிக்கொண்ட ஹர்திக் பாண்டியா கில்.. திடீர் பகைக்கு காரணம் என்ன.. உண்மையில் என்ன நடந்தது?

0
937
Gill

நேற்று ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில்லிடம் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா நடந்து கொண்ட விதம் தற்பொழுது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

இந்த போட்டியில் வெல்லும் அணி இரண்டாவது தகுதி சுற்றுக்கு செல்லும், மேலும் தோல்வி அடையும் அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிக முக்கியமான போட்டியில் பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் நேற்று இரண்டு அணிகளும் மோதிக்கொண்டன.

- Advertisement -

டாஸ் நிகழ்வில் ஏற்பட்ட சலசலப்பு

இதைத்தொடர்ந்து போட்டிக்கான டாஸ் நடைபெற்றது. அப்பொழுது இரண்டு கேப்டன்களும் சம்பிரதாயமாக கைக்குலிக்குக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா கில் முகத்தை பார்த்து பிறகு கைகுலுக்க மனமில்லாமல் நகர்ந்து சென்றுவிட்டார். அவருடைய பார்வை உனக்கு எதுக்கு நான் இதை செய்ய வேண்டும் என்பது போல இருந்தது.

இதற்கு அடுத்து குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்ய வந்த பொழுது போல்ட் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆனார். அடுத்து அவர் மேல்முறையீட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என சாய் சுதர்சனிடம் நேராக சென்று பேச ஆரம்பித்தார். அந்த நேரத்தில் நேராக அவர்களை நோக்கி ஓடி வந்த ஹர்திக் பாண்டியா அதுவரையில் பேசாமல் வந்து, சரியாக இல்லை நெருங்கியதும் ஆக்ரோஷமாக கத்தினார். இதன் மூலம் இருவருக்குள்ளும் ஏதோ பகை இருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

- Advertisement -

என்ன காரணமாக இருக்கலாம்?

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கோப்பையை வென்ற கேப்டனாக இருந்தார். பிறகு திடீரென அந்த அணியை விட்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்கிறேன் என்று போய்விட்டார். இதன் அடுத்த சீசன் குஜராத் டைட்டன்ஸ் அணி கடுமையாக பாதிக்கப்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதன் காரணமாக அந்த அணியில் இருந்த எல்லோருக்கும் ஹர்திக் பாண்டியா மீது மனக்கசப்பு இருந்தது.

இதையும் படிங்க : சாய் சுதர்சன் வாஷிங்டன் கிட்ட சொன்ன நியூஸ் இதுதான்.. தோத்துட்டோம் ஆனா சாயை நினைச்சு பெருமைதான் – கேப்டன் கில் பேட்டி

இத்தோடு மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை தொடர்ந்து வெல்ல முடியாமல் இருந்து வந்தது. மேலும் கில்லுக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தோடு அவரை ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாகவும் மாற்றுவார்கள். ஏனென்றால் அவர்தான் துணை கேப்டன் ஆக இருக்கிறார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு வெள்ளைப்பந்து அணியிலும் கேப்டன் பதவி கிடைக்காது. இதுவெல்லாம் சேர்ந்து ஹர்திக் பாண்டியா கில் மீது பகையை காட்டுகிறார் என்று கூறப்படுகிறது!

- Advertisement -