கபில்தேவ் இம்ரான் கான் ரெக்கார்ட் பிரேக்.. பும்ரா புதிய 2 சாதனைகள்.. தெறி பவுலிங்

0
350
Bumrah

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்று இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தது.

இந்த நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த போட்டிக்கான தாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். ஆனால் இந்தியா அணியில் ஜெய்ஸ்வால் தவிர எந்த பேட்ஸ்மேனும் 35 ரன்கள் எடுக்கவில்லை.

இறுதியில் மிகச் சிறப்பாக விளையாடி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுக்க, இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்கள் சேர்த்தது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் இது குறைவான ரன்னாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் களம் இறங்கிய இங்கிலாந்து 114 ரன் வரையில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்தது. இப்படியான சூழ்நிலையில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி, இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பி இருக்கிறார்.

- Advertisement -

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போட்டியில் ஜோ ரூட், போப், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டாம் ஹார்ட்லி ஆகியோர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

மொத்தம் 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பும்ரா 64 இன்னிங்ஸ்கலில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இதன்மூலம் ஆசியாவைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர்களில் குறைந்த போட்டிகளில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளராக வந்திருக்கிறார். பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ் 27 டெஸ்ட், பாகிஸ்தானின் இம்ரான் கான் 37 டெஸ்ட் என முதல் மற்றும் மூன்றாம் இடங்களில் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : வீடியோ.. ரூட் போப்புக்கு பும்ரா விரித்த மாயவலை.. எப்படி செட் செய்தார்?.. மாஸ்டர் பிளான் அனலைஸ்

மேலும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ரா குறைந்த இன்னிங்ஸ்களில் 150 விக்கெட்டை கைப்பற்றிய பந்துவீச்சாளராக சாதனை படைத்திருக்கிறார். பும்ரா 64 இன்னிங்ஸ், கபில்தேவ் 68, ஜவகல் ஸ்ரீநாத் 72 என அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.