இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு பெரிய அளவில் சாதகம் இல்லாத அளவுக்கு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பான விஷயமாக இருக்கிறது.
டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவிக்க, 112 ஓவர்கள் 396 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆண்டர்சன் மற்றும் ரேகாந்த் அகமத் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து வழக்கம் போல் அதிரடியாகவே ஆரம்பித்தது. 10.2 ஓவரில் 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி பிரிந்தது. குல்திப் யாதவ் பென் டக்கெட்டை 21 ரன்களில் வெளியேற்றினார்.
ஆனாலும் மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி அதிரடியில் மிரட்டினார். அவர் 78 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 76 ரன்கள் எடுத்து அக்சர்பட்டியில் பந்துவீச்சை தாக்கி விளையாடும் முயற்சியில் ஆட்டம் இழந்தார்.
இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது இங்கிலாந்து 114 ரன்கள் எடுத்து வலிமையான இடத்தில் இருந்தது. முதல் டெஸ்டின் நாயகன் போப் மற்றும் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் இருவரும் களத்தில் இருந்தார்கள்.
பொதுவாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் எஸ்ஜி பந்துகள் கொஞ்சம் தேய்ந்த பிறகுதான் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை இரண்டாவது ஸ்பெல்லுக்கு அழைத்தார்.
பந்துவீச்சுக்கு பெரிய சாதகம் இல்லாத நிலையில் வழக்கம்போல் பும்ரா தன்னுடைய மேஜிக்கை நடத்திக் காட்டினார். ஜோ ரூட்டை ரிவர்ஸ் ஸ்விங் மூலம் பந்தை உள்ளே கொண்டு வந்து கடந்த முறை பும்ரா ஆட்டம் இழக்க வைத்திருந்தார்.
இதன் காரணமாக ஜோ ரூட் உள்ளே வரும் பந்துக்கு காத்திருந்தார். ஆனால் பும்ரா ரிவர்ஸ் ஸ்விங்கை பயன்படுத்தாமல், ஜோ ரூட் எதிர்பார்த்ததற்கு மாறாக பந்தை உள்ளே கொண்டு வராமல் அவுட் ஸ்விங் வீசி எட்ஜ் எடுக்க வைத்து கில் மூலம் வெளியேற்றினார்.
இதற்கு அடுத்து போப்புக்கு பும்ரா வேறு திட்டத்தை வைத்திருந்தார். இவருக்கு ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் வீசுவது இல்லாமல், அதை யார்க்கராக வீச வேண்டும் என்கின்ற முடிவில் இருந்தார். ஜோ ரூட் ஆட்டம் இழந்து ஜானி பேர்ஸ்டோ உள்ளே வந்ததும், அவருக்கும் இதே திட்டத்தில்தான் இருந்தார்.
ஆனால் ஜானி பேர்ஸ்டோ இதில் தப்பிக்க போப் வசமாக பூம்ராவின் ரிவர்ஸ் ஸ்விங் யார்க்கரில் சிக்கினார். ஆஃப் ஸ்டெம்க்கு வெளியே ரிலீஸ் ஆன பந்து, காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக எதிர்பக்கம் ஸ்விங் ஆகி லெக் ஸ்டெம்பை தாக்க, போப் நிலை குலைந்து போனார்.
இதையும் படிங்க : அன்று பாகிஸ்தான் இன்று இங்கிலாந்து.. 17 வருடம் பிறகு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் நடந்த சம்பவம்
இங்கிலாந்து கையில் இருந்த ஆட்டத்தை தன்னுடைய அதிசிறந்த பந்துவீச்சு திறமையால் பும்ரா தற்போதைக்கு இந்தியா பக்கம் திருப்பி இருக்கிறார். தற்பொழுது இங்கிலாந்து நான்கு விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருக்கிறது. தேநீர் இடைவேளை முடிந்து கடைசி செஷனில் இரண்டு அணிகளும் எப்படி செயல்படுகின்றன என்பதை பொறுத்து இந்த டெஸ்டில் வெற்றி தீர்மானிக்கப்படலாம்.
BUMRAH DESERVES A SEPRATE AWARD FOR THIS MENTAL YORKER…!!! 🤯🔥pic.twitter.com/mtkf3D5E6s
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 3, 2024