இந்தியாவைப் பொறுத்த வரையில் கிரிக்கெட் போட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் என்கிற வார்த்தை ஒரு நாளில் உபயோகப்படாமல் இல்லை அந்த அளவுக்கு இந்திய மண்ணில் கிரிக்கெட் ஊறிப் போய் உள்ளது.
இந்திய அணி வெற்றி பெற்றால் பட்டாசு வெடித்து கொண்டாடுவதும் அதேபோல தோல்வியடைந்தால் அடுத்த ஒரு மாதத்திற்கு அதைப் பற்றியே சிந்தித்து கவலை கொள்வதும் என இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டை அவ்வளவு நேசிக்கின்றனர். இப்படிப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் சகோதரர்களைப் பற்றி நாம் அவ்வளவாக அறிந்ததில்லை. அப்படி நாம் அவ்வளவாக கேள்விப்பட்டிராத இந்திய கிரிக்கெட் வீரர்களின் சகோதரர்களைப் பற்றி பார்ப்போம்
விராட் கோலி – விகாஸ் கோலி
Virat Kohli With His Brother & Sister 😍#12YearsOfViratKohli | #ViratKohli | @imVkohli pic.twitter.com/qW8BSRfqTC
— Virat Kohli Trends (@TrendVirat) August 17, 2020
விராட் கோலி என்ற பெயரை எடுத்துக் கொண்டால் இந்திய கிரிக்கெட் பட்டியலில் அது ஒரு முத்திரை பதித்த பேராக தற்பொழுது உள்ளது. சாதாரண சிறுவனாக உள்ளே நுழைந்து இப்பொழுது இந்திய கிரிக்கெட்டை கட்டிய ஆண்டு கொண்டிருக்கிறான் என்று நாம் கூறலாம். அனைத்து வகை பார்மேட்டுக்கும் கேப்டனாக இந்திய அணியை தலைமை தாங்கி வந்து கொண்டிருக்கிறார்.
அவருடைய சகோதரர் விகாஸ் கோலி இந்திய இசை தயாரிப்பாளர் ஆவார். இதுவரை அவர் ஜாஸ், ஹிப்ஹாப், மெட்டல், கன்ட்டிரி பாப் மற்றும் பங்க் என அனைத்து வகை இசையும் அவர் அமைத்துள்ளார். விராட் கோலியின் தந்தை இறந்தபிறகு வீட்டையும் அனைத்து பொறுப்பையும் விகாஸ் கோடிதான் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவராஜ் சிங் – ஜோரவர் சிங்
@ColorsTV Akanksha Sharma married to Zorawar Singh, Yuvraj Singh’s younger brother #BiggBoss10 pic.twitter.com/Js7ZQPK5sz
— मैं एक नोमैड हूँ (@NomadBulleteer) October 16, 2016
உலக கோப்பை 2011 என்று யாராவது பேச ஆரம்பித்தால் அதில் யுவராஜ் சிங் பெயர் கண்டிப்பாக இருக்கும் அந்த அளவுக்கு தொடர் முழுவதும் அவர் சிறப்பாக பங்காற்றினார். மேலும் இந்திய அணிக்காக அனைத்து கோப்பைகளை வென்ற ஒரே வீரர் இவர் ஆவார்.
அவருடைய சகோதரர் ஜோரவர் சிங் முன்பு நடிப்பதில் ஆர்வம் காட்டினார் ஆனால் நாளடைவில் நடிப்பிலிருந்து முழுக்கு போட்டார். அவரைப் பற்றி அவ்வளவாக வெளியே தெரியாத நிலையில் அவருடைய மனைவி பிக்பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு விஷயம் வேறு மாதிரி சென்றது அவர் வேறு விதமாக அனைவர் மத்தியிலும் பிரபலமானார்.
ராகுல் டிராவிட் – விஜய் டிராவிட்

இந்திய கிரிக்கெட்டின் சுவர் என்றால் அதில் ராகுல் டிராவிட் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வளவு பெரிய ஆதிக்கத்தை செலுத்திய ராகுல் டிராவிட் அவர்களின் சகோதரர் விஜய் டிராவிட் ஆவார். ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்கு மிகப்பெரிய உதவியை அவருடைய சகோதரர் விஜய் டிராவிட் புரிந்திருக்கிறார் என்பது யாரும் அறிந்திராத ஒரு விஷயமாகும்.
மேலும் இருவரும் அவ்வளவு நெருக்கமாக இருப்பார்கள். இந்த இருவரில் யாராவது ஒருவருக்கு ஏதாவது பிரச்சினை என்று ஏற்பட்டுவிட்டால் மற்றொருவர் உடனே விரைந்து உதவி செய்து விடுவார், என்று சொல்லும் அளவுக்கு இருவரும் அவ்வளவு நெருக்கமான சகோதரர்கள்.
ரோகித் சர்மா – விஷால் சர்மா
Rohit sharma and his brother vishal sharma visit cricket academy at Mumbai 😇😍@ImRo45 #RohitSharma pic.twitter.com/JceydP2Xtc
— Manoj45 (@Imro45fans) December 27, 2019
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நான் என்று செல்லமாக அழைக்கப்படும் ரோகித் சர்மாவை பற்றி அனைவரும் அறிவர் அதிரடியாக ஆடக்கூடிய கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மாவின் சகோதரர் விஷால் சர்மா ஆவார்.
அதிகமாக இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் காணப்படும் விஷால் சர்மா மிகவும் அன்பாக ரோகித் சர்மாவுடன் இருப்பார். அண்ணனும் தம்பியும் இப்பொழுதும் இணைந்தே காணப்படுவார்கள். விஷால் சர்மாவுக்கு இன்ஸ்டகிராம் வலைதளத்தில் அதிக பாலோவர்ஸ் கிடைக்க ரோகித் சர்மா உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திர சிங் – தோனி நரேந்திர சிங் தோனி
Baby #Ziva with uncle Narendra singh Dhoni pic.twitter.com/9jtIhSynzk
— Dhoni Raina Team (@dhoniraina_team) November 15, 2016
மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் ஆகச் சிறந்த கேப்டன் என்பது நாம் அனைவரும் அறிவோம். அவருடைய வாழ்க்கை வரலாறு கூட ஒரு படமாக வரும் அளவுக்கு அவர் ஒரு ஆகச் சிறந்த கிரிக்கெட் வீரர் ஆவார். ஆனால் மகேந்திர சிங் தோனிக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்று என்பது பற்றி அப்படத்தில் எந்தவித காட்சிகளும் காட்டப்படவில்லை.
இது சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் மகேந்திர சிங் தோனியின் அண்ணன் நரேந்திர சிங் தோனி, நான் அப்படத்தில் இடம் பெறவில்லை. மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிகப் பெரிய அளவில் உதவி புரியவில்லை என்பதாலேயே நான் அப்படத்தில் அவ்வளவாக காட்டப்படவில்லை என்றும், மேலும் அது மகேந்திர சிங் தோனியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த படமே தவிர அவரின் குடும்பத்தை பற்றிய படம் கிடையாது என்கிற விளக்கத்தை கொடுத்தார்.
சௌரவ் கங்குலி – சினேஹசிஷ் கங்குலி

சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட்டுக்கு புதிய முகத்தை அமைத்துக் கொடுத்தார் என்றால் சவுரவ் கங்குலிக்கு கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியதே சினேஹசிஷ் தான். 10 ஆண்டுகள் பெங்கால் அணிக்காக அவருடைய சகோதரர் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வலது கை பேட்ஸ்மேனான சவுரவ் கங்குலியை இடது கையில் விளையாட அறிவுறுத்தியது அவருடைய சகோதரர் தான். அதன் காரணமாகவே தற்பொழுது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஏன் உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே இடதுகை பேட்ஸ்மேன் என்றால் அது நிச்சயமாக எல்லோருக்கும் சௌரவ் கங்குலி நினைவில் வந்துவிடுவார். சவுரவ் கங்குலிக்கு அவனுடைய சகோதரர் உதவி புரிந்தது போல், ஸ்னேஹசிஷ் கங்குலிக்கு அவருடைய சொந்த பிசினஸில் ஒரு சில உதவிகளை சௌரவ் கங்குலி செய்திருக்கிறார்.