ஐபிஎல் 2024-ல் விளையாட வாய்ப்புள்ள 2 பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களின் தம்பிகள்!

0
626
Shami

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் மிக வெற்றிகரமாக 16 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற இருக்கிறது.

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனுக்காக இந்த ஏலம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மெகா ஏலத்திற்கு அடுத்து நடக்கும் மினி எழுத்தின் மூலமாக அனைத்து அணிகளுமே தங்களது குறைகளை சரி செய்து பலமாகும். எனவே மெகா ஏலத்திற்கு அடுத்த ஆண்டில் வரக்கூடிய ஐபிஎல் தொடர் எப்போதுமே சவால் அளிக்க கூடியது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் தொடரை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் இந்திய கிரிக்கெட் சகோதரர்கள் இர்ஃபான் பதான் மற்றும் யூசுப் பதான் விளையாடி இருக்கிறார்கள். பிறகு தற்பொழுது ஹர்திக் பாண்டியா மற்றும் குர்னால் பாண்டியா இருவரும் விளையாடி வருகிறார்கள்.

இதேபோல ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு கிரிக்கெட் சகோதரர்களாக ஆல்பி மோர்கல் மற்றும் மோர்னி மோர்கல் இருவரும் விளையாடி இருக்கிறார்கள். அடுத்து சமீபத்தில் இங்கிலாந்தின் டாம் கரன் மற்றும் சாம் கரன் இருவரும் விளையாடி இருக்கிறார்கள்.

இந்த வகையில் தற்பொழுது பிரபல இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களின் சகோதரர்கள் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. அவர்கள் யார்? என்று பார்ப்போம்.

- Advertisement -

முகமது சமி – முகமது கைஃப்
இந்திய அணியின் தற்போதைய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியின் தம்பி முகமது கைஃப் ஆவார். 27 வயதான இவர் வலதுகை வேகப்பந்துவீச்சாளர்.

இவர் பெங்கால் அணிக்காக 9 லிஸ்ட் ஏ வெள்ளைப்பந்து போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இவர் வருகின்ற ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது சுவாரசியமான ஒன்றாக இருக்கும்.

சர்பராஸ் கான் – முசீர் கான்
மும்பை மாநில அணிக்காகவும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காகவும் விளையாடிய வலது கை பேட்ஸ்மேன் சப்ராஸ் கானின் தம்பி முசிர் கான் ஆவார்.

இவர் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் விளையாடி வருகிறார். மேலும் மும்பை மாநில அணிக்கு முதல் தரப் போட்டிகளில் மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இவர் இடது கையில் சுழற்பந்து வீசும் ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த முறை இவர் சில ஐபிஎல் அணிகளின் முகாம்களுக்கு சென்று வந்திருப்பதாக செய்திகள் சுவாரசியத்தை கூட்டுகிறது.