77 ரன்கள்.. அதிகபட்சம் 27 ரன்.. ஜவ்வாய் இழுத்த போட்டி.. இலங்கை அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி

0
771
T20iwc2024

இன்று டி20 உலகக்கோப்பையில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நியூயார்க் நாசாவ் மைதானத்தில் நடைபெற்றது. பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் நடைபெற்ற போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஹசரங்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரது இந்த முடிவால் சொந்த அணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கை பேட்ஸ்மேன்களால் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை இந்த குறிப்பிட்ட ஆடுகளத்தில் எதிர்கொண்டு விளையாட முடியவில்லை.

- Advertisement -

இந்த போட்டியில் இலங்கை பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் மட்டுமே ஒற்றை இலக்கத்தை தாண்டினார்கள். மற்ற எட்டு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அந்த அணிக்கு அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 30 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். இரண்டாவது அதிகபட்சமாக ஆஞ்சலோ மேத்யூஸ் 16 பந்தில் 16 ரன்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சில் அன்றிச் நோக்கியா 4 ஓவர்களுக்கு 7 ரன்கள் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இலங்கை அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. மேலும் அந்த அணியின் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த ஸ்கோர் ஆக இது பதிவானது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணியும் தடுமாறியது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களாலும் ரன்கள் அடிக்க முடியவில்லை. ரீசா ஹென்றிக்ஸ் 2 பந்தில் 4, கேப்டன் மார்க்ரம் 14 பந்தில் 12, குயிண்டன் டி காக் 27 பந்தில் 20, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 28 பந்தில் 13 ரன் என வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : நான் திறமையா இருந்தாலும் செலக்ட் பண்ண மாட்டாங்க.. செலக்சன் நடக்கிறது வேற மாதிரி – சஞ்சு சாம்சன் பேட்டி

இந்த நிலையில் ஆட்டம் இழக்காமல் ஹென்றி கிளாசன் 22 பந்தில் 19 ரன்கள், டேவிட் மில்லர் 6 பந்தில் 6 ரன் எடுக்க, தென் ஆபிரிக்கா அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 16.2 ஓவரில் வெற்றி பெற்றது. இந்த முழு போட்டியில் குயின்டன் டி காக் அடித்த 27 ரன்கள்தான் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -