டி20 உலக கோப்பை 2024.. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை.. கேப்டனின் தவறான முடிவு

0
267
Srilanka

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இன்று குரூப் டி பிரிவில் இருந்து, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதி கொண்ட போட்டி நியூயார்க் மைதானத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி தன்னுடைய டி20 கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் வனிந்து வசரங்கா எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். புதிய மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டியில், ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க இரண்டாவது பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கை அணி டாசில் செய்த தவறு அவர்களது பேட்டிங்கில் அப்படியே எதிரொலித்தது. அந்த அணி 13 ரன்கள் எடுத்திருந்த பொழுது அது நிஷா அக்கா விக்கெட்டை முதல் விக்கெட்டாக இழந்தது. அங்கிருந்து மேற்கொண்டு 64 ரன்கள் மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19.1 ஓவரில் 77 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.

இலங்கை அணிக்கு பேட்டிங்கில் குசால் மெண்டிஸ் 30 பந்தில் 19 ரன், கமிந்து மெண்டிஸ் 15 பந்தில் 11 ரன், அஞ்சலோ மேத்யூஸ் 16 பந்தில் 16 ரன்கள் என இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தார்கள். மற்ற எட்டு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

- Advertisement -

ஆடுகளத்தில் ஸ்பான்ச் பவுன்ஸ் இருந்தது. மேலும் பந்து அவ்வப்போது நின்று கொஞ்சம் மெதுவாகவும் வந்தது. இதை பயன்படுத்திய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள். ஐபிஎல் தொடரில் ரன்களை வாரி இறைத்த அன்றிச் நோர்க்கியா 4 ஓவர்களுக்கு 7 ரன்கள் மட்டுமே தந்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : இவரை விமர்சனம் பண்ணி பாருங்க.. ரசிகர்கள் எத்தனை நாள் ஆனாலும் விடமாட்டாங்க – பாட் கம்மின்ஸ் பேட்டி

இலங்கை அணிக்கு ஒட்டுமொத்தமாகச் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த 77 ரன்கள் மிகக் குறைந்த ரன்களாக பதிவாகியது. 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக 82 ரன்கள் எடுத்தது அந்த அணிக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோர் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -