“தம்பிகளா எதையாவது வித்தியாசமாக செய்யுங்கப்பா” – இந்திய அணிக்கு ஜடேஜா அறிவுரை!

0
249
Jadeja

இந்திய டி20 அணி ஆசியக் கோப்பை தொடருக்கு விளையாட சென்றதிலிருந்து விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டே வருகிறது. அது நேற்று ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதல் டி20 போட்டியிலும் தொடர்ந்தது!

இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் சூர்யகுமார் யாதவ் இறுதியில் வந்த ஹர்திக் பாண்டியா என அனைவரும் பின்னி எடுக்க 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 208 ரன்களை குவித்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியில் கேமரூன் கிரின் மற்றும் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் இருவரும் அதிரடியில் நொறுக்கித் அல்ல, ஆஸ்திரேலிய அணி அனாயசமாக இந்திய அணியை ஊதித் தள்ளியது. 200 ரன்களுக்கு மேல் அடித்து இந்திய அணி தோல்வியைத் தழுவி உள்ளதால் இந்தத் தோல்வி பெரிய விமர்சனங்களை இந்திய அணியின் மீது உருவாக்கியிருக்கிறது.

நேற்று மைதானத்திற்கு டாஸ் போட வந்ததிலிருந்து கேப்டன் ரோகித் சர்மா ஒரு மாதிரி கோபமாகவே தெரிந்தார். இதை கிரிக்கெட் வர்ணனையிலும் சொன்னார்கள். அதற்கடுத்து நிலைமை அப்படியே சென்று, ஒருகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் இரண்டாவது விக்கெட்டை எடுக்கும் பொழுது தான் ரோகித் சர்மா சாதாரண நிலைமைக்கு வந்தார். நேற்று அவரைப் பார்த்த பொழுது ஆட்டம் போனால் போகட்டும் என்பது போல் தெரிந்தார்.

தற்பொழுது இந்திய அணியின் இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறும்பொழுது ” அக்ஷர் பட்டேல் தவிர்த்து மற்றவர்கள் பந்துவீசிய பொழுது இந்திய அணிக்கு என்ன வாய்ப்பு இருந்தது என்று யோசிக்கிறேன். எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. அக்ஷரும் தொடர்ந்து பந்து வீசவில்லை. அவரைத் தவிர ஆஸ்திரேலிய வீரர்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை. நாம் நமது வாய்ப்புகளை எடுக்க வேண்டும். இந்தியா அவர்களின் விக்கெட்டை எடுத்தபொழுது தனது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தது, ஆனால் அது பலனளிக்கவில்லை. நாம் எங்கு தவறு செய்தோம் என்று கண்டுபிடிப்பது கடினம் ஏனென்றால் ஆட்டம் முழுவதும் அப்படியே இருந்தது. அங்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. அந்த நிலையில் ஏதாவது வித்தியாசமாக செய்து இருக்க வேண்டும் ” என்று கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நான் ஆரம்பத்தில் அக்சர் படேல் உடன் பந்துவீச போயிருப்பேன். பந்து சீமிங் ஆகும்பொழுது அவரால் நன்றாக செயல்படமுடியும். அவர் மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமாக பந்துவீச்சில் இருந்தார். சாகல் இடமும் சில விஷயங்கள் இருந்தது. ஆனால் எதுவுமே நினைத்தபடி நடக்கவில்லை. ரோகித் சர்மாவை உணர்ந்து கொள்கிறேன். அவர் செய்தது எல்லாம் சரியாகத்தான் இருந்தது ஆனால் ஆஸ்திரேலியாவிடம் எல்லாவற்றுக்கும் பதில் இருந்தது” என்று கூறியிருக்கிறார்.