“தம்பி இதை மட்டும் செய்யாத!” – 630 சர்வதேச விக்கெட் எடுத்த லெஜன்ட் பவுலர் பும்ராவுக்கு அறிவுரை!

0
856
Bumrah

தற்போதைய இந்திய கிரிக்கெட்டின் வேகப்பந்துவீச்சு தலைவர் ஜஸ்ட்பிரித் பும்ராதான். அவருடைய வித்தியாசமான பந்து வீசும் முறை மற்றும் அவருடைய புத்திசாலித்தனமான பந்துவீச்சு ஆகியவை, அவரை உலகின் ஆபத்தான வேகப்பந்துவீச்சாளராக வைத்திருக்கிறது!

கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்த பும்ரா, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக, ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணத்தில் திரும்ப வந்தார். ஆனால் ஒரு போட்டியில் விளையாடிய அவரால் மீண்டும் காயம் பெரிதாக விளையாட முடியாமல், டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகினார்.

- Advertisement -

மேற்கொண்டு அவரால் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் மிக முக்கியமான பார்டர் கவாஸ்கர் டிராபி இந்தியாவில் நடந்த பொழுது விளையாட முடியவில்லை. மேலும் இறுதிப் போட்டியிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் இந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களையும் இந்திய அணி இழந்திருக்கிறது.

பந்து வீசும்போது முதுகுப் பகுதிக்கு தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக காயம் ஏற்பட்டு, நியூசிலாந்தில் அதற்கு அறுவை சிகிச்சை செய்து திரும்ப வந்த பும்ரா, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு திரும்ப வந்ததோடு கேப்டனாகவும் பொறுப்பேற்று தொடரை வென்றார். இந்தத் தொடரில் அவரது வேகப்பந்து வைத்து மீண்டும் பழையபடி சிறப்பாக இருந்தது. முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், மேலும் தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

காயத்திலிருந்து வந்திருக்கும் இவர் குறித்து வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் அம்ப்ரோஸ் கூறும் பொழுது ” பும்ரா அற்புதமான வேகப்பந்துவீச்சாளர். நான் பார்த்த மற்ற வேகப்பந்துவீச்சாளர்களை விட அவர் வித்தியாசமானவர். அவர் மிகவும் வழக்கத்திற்கு மாறான அதே சமயத்தில் மிகவும் திறமையானவர். காயத்தில் இருந்து மீண்டும் திரும்பி வரும் பொழுது, ஒரு பந்துவீச்சாளராக மீண்டும் காயமடைய கூடாது என்பது மூளையில் பதிந்திருக்கும் விஷயமாக மாறும். அவருக்கு என்னுடைய அறிவுரை, அவர் மீண்டும் பழையபடி வருவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக காலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதில் அவர் அவசரப்பட்டு வீசும் முதல் பந்தில் இருந்தே தாக்கத்தை உருவாக்க முயற்சி செய்யக் கூடாது. வெளிப்படையாக பும்ரா சில பயிற்சி அமர்வுகளை விரும்புவார். இதற்காக சில போட்டிகளிலும் விளையாடுவார். ஆனால் இதை மெதுவாக எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக முன்னேறுவது நல்லது. நீங்கள் உங்களை முழுமையாக வசதியாக உணரும் பொழுது, முதல் பந்தில் இருந்தே பழையபடி தொடரலாம். ஆனால் அப்படி இல்லாத பொழுது முதல் பந்தில் இருந்தே வெளியேறக்கூடாது. ஏனென்றால் நீங்கள் மீண்டும் காயமடைவதை விரும்பவில்லை.

இந்திய வீரர்கள் உலகக் கோப்பையை சொந்த நாட்டில் விளையாடுவதால் மிகுந்த அழுத்தத்தில் இருப்பார்கள். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்தியர்கள் மிக ஆர்வமாக இருப்பார்கள் என்பது நாம் அறிந்த விஷயம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நான் இவர்களை பார்த்ததிலிருந்து இவர்கள் இந்த அழுத்தத்தை சமாளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதே சமயத்தில் இவர்களுக்கு இது எளிதான ஒன்றாகவும் இருக்காது என்று கூறுகிறேன். ஒவ்வொரு ஆட்டத்திலும் பெரிய அழுத்தம் இருக்கும். அதை இவர்கள் நன்றாகவே சமாளிக்க செய்வார்கள்!” என்று கூறியிருக்கிறார்!