“பிரதர் நீங்க வித்தியாசமா இருந்தா ஆச்சரியப்பட வேண்டாம்!” ஹபீஸ்க்கு முன்னாள் இந்திய வீரர் பதிலடி!

0
946
Hafeez

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

இதன் ஒரு பகுதியாக நாளை உலகக் கிரிக்கெட்டில் உச்ச போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது!

- Advertisement -

இதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு எதிர்பார்ப்பில் போட்டிக்காக காத்திருக்கிறார்கள். எந்த நாடு வெற்றி பெறுகிறதோ அந்த நாட்டில் நாளை திருவிழாதான் என்பதில் சந்தேகம் கிடையாது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீரர் முகமது ஹபீஸ், உலகக் கோப்பையை ஐசிசி நடத்துகிறதா? இல்லை பிசிசிஐ நடத்துகிறதா? என்று நாளை தெரிந்து விடும் என்று கூறியிருந்தார்.

காரணம், ஒரு மைதானத்தில் இந்தியாவுக்கு ஒரு ஆடுகளத்தையும் மற்றவர்களுக்கு இன்னொரு ஆடுகளத்தையும் தருவதாகத் தெரிந்தால், அது ஐசிசி இந்தியாவுக்கு உதவி செய்கிறது என்று அர்த்தம் என்பதாக கூறியிருந்தார்.

- Advertisement -

நாளை போட்டி நடைபெறுகிற குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடப்பு உலகக்கோப்பையின் முதல் போட்டி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. நாளை அந்தப் போட்டிக்கு கொடுக்கப்பட்ட ஆடுகளம் போலவே இல்லாவிட்டால், அது கேள்விக்குரியது என்றும், ஒருதலைப் பட்சமானது என்றும் அவர் கூறியிருந்தார்.

தற்போது இதுகுறித்து சில உண்மை தகவல்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ட்விட்டர் வாயிலாக முகமது ஹபீஸ்க்கு தெரிவித்திருக்கிறார். அதில் அவர் ஒரு முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டி இருக்கிறார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “பிரதர் சென்னை ஸ்கொயரில், மற்றும் இந்தியா முழுக்க உள்ள மைதானங்களில் இப்போது வெவ்வேறு மண்ணிலான ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது.

அவை சிவப்பு மற்றும் கருப்பு மண்ணிலும் இரண்டும் கலந்த கலவையிலும் சேர்ந்து ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது. எனவே இந்தியாவில் உங்களுக்கு வித்தியாசமான ஆடுகாலங்கள் கிடைத்தால் அது குறித்து நீங்கள் ஆச்சரியப்படாதிர்கள்!” என்று கூறி இருக்கிறார்!