டிராவிட் சரிப்பட்டு வரமாட்டார், டி20 போட்டிகள் பற்றி நல்லா தெரிஞ்சவங்களை அதுக்கு கோச் ஆக்குங்க – ஹர்பஜன் சிங் கருத்து!

0
122

டி20 அணிக்கென்று தனி கேப்டன் இருப்பதுபோல தனி பயிற்சியாளர் வேண்டுமென்று கருத்து தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

மூன்று வித போட்டிகளுக்கும் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி, 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைக்கு பிறகு அனைத்து விதமான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

- Advertisement -

அப்போது டெஸ்ட் போட்டிக்கென்று தனி கேப்டன், லிமிடெட் ஓவர் போட்டிகளுக்கென்று தனி கேப்டன் என்கிற வகையில் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் பிசிசிஐ அப்படி ஒரு முடிவுக்கு ஒப்புக்கொள்ளாமல், மூன்றுவித போட்டிகளுக்கும் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது.

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு, டி20 போட்டிகளுக்கான திட்டத்திலிருந்து மூத்த வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இந்த வருடம் நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும், அதற்கென்று பணிச்சுமையை குறைக்க இந்த முடிவை எடுத்திருப்பதாக பிசிசிஐ தெரிவித்தது.

20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். முன்பு தனித்தனி கேப்டன்கள் வேண்டாம் என்று சொன்ன பிசிசிஐ தற்போது தனித்தனியாக நியமித்திருக்கிறது.

- Advertisement -

இதுபோன்று டி20 போட்டிகளுக்கென்று தனியாக பயிற்சியாளர் மற்றும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளைக்கென்று தனியாக பயிற்சியாளரை நியமித்தால் அணியின் செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்கும். டி20 போட்டிகளுக்கு ஆக்ரோஷமிக்க பயிற்சியாளர் இருப்பது அவசியம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஹர்பஜன் சிங்.

“தனித்தனி கேப்டன் இருப்பது போல, தனித்தனி பயிற்சியாளர்கள் இருப்பதில் தவறில்லை. இங்கிலாந்து அணிக்கு மெக்கல்லம் எப்படி ஆக்ரோஷமாக செயல்படுகிறாரோ, அப்படிப்பட்ட ஒரு பயிற்சியாளர் டி20 போட்டிகளுக்கு வேண்டும். வீரேந்திர சேவாக் அல்லது ஆஷிஷ் நெக்ரா இருவரில் ஒருவரை உள்ளே கொண்டு வரலாம்.

நெக்ரா ஏற்கனவே ஹார்திக் பாண்டியா உடன் பணியாற்றியுள்ளார். இருவருக்கும் இடையே நல்ல புரிதலும் இருக்கின்றது. அவரைக் கொண்டுவரலாம். ராகுல் டிராவிட், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை பார்த்துக் கொள்ளட்டும். அவருக்கு இந்த இரண்டு போட்டிகளும் மிகவும் பரிட்சயம் ஆனது. ஆனால் டி20 போட்டிகளுக்கு அவரது அணுகுமுறை சரியாக வரும் என்று தெரியவில்லை.

டி20 போட்டிகளைப் பற்றி நான்கு அறிந்த ஆக்ரோஷமான அணுகுமுறை கொண்ட ஒருவரை நியமிதால், இந்திய அணியின் செயல்பாடு இரட்டிப்பாகும்.” என்று கருத்து தெரிவித்தார்.