கம்மின்ஸ் பச்சையாக பொய் சொல்கிறார்.. நாங்க செஞ்ச குற்றம் அவருக்கு தெரியும் – பான்கிராப்ட் பேட்டி

0
0

​ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேமரூன் பான்கிராப்ட், 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ‘சேண்ட்பேப்கேட்’ (Sandpapergate) பந்து-சேதப்படுத்தல் விவகாரம் குறித்து புதிய மற்றும் அதிரடியான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

​ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, பந்து-சேதப்படுத்தல் திட்டம் குறித்து தங்களுக்கு முன்பே எதுவும் தெரியாது என்று திட்டவட்டமாக மறுத்திருந்தார். கம்மின்ஸின் இந்த மறுப்புக்கு பதிலளிக்கும் விதமாக பான்கிராப்ட் தற்போது தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

- Advertisement -

​இதுகுறித்து கேமரூன் பான்கிராப்ட் பேசும்போது “இந்த விவகாரத்தில் பல உண்மைகளை நான் மறைத்தேன் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், ஒட்டுமொத்த அணியினருக்கும் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கும் இந்த விவகாரம் குறித்து நன்றாகவே தெரியும் என்பதை இப்போது வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “அன்றைய தொடரில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் செய்தோம். அணியில் உள்ள பலருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால், அந்த நேரத்தில் அனைவரையும் காப்பாற்றுவதற்காக நானே அந்த ஒட்டுமொத்த பழியையும் என் மீது சுமந்து கொண்டேன்” என்றும் அவர் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

​அரசியல் மற்றும் கேப்டன் கம்மின்ஸின் கூற்றுகளுக்கு எதிராக பான்கிராப்ட் வெளியிட்டுள்ள இந்த புதிய ஒப்புதல் வாக்குமூலம் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -