முதல் டெஸ்ட்டுக்கு கம்பீர் தேர்வு செய்த அணி மோசமானது.. அந்த இரண்டு வீரர்கள் செய்த தவறு என்ன? – இந்திய ரசிகர்கள் கோபம்

0
0

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி சரியில்லை என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கம்பீர் மீது விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் விளையாடவில்லை. இவர்களுடைய இடத்தில் அன்சூல் காம்போஜ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பெற்றுள்ளார்கள்.

- Advertisement -

இந்தியா கடைசியாக இங்கிலாந்துக்கு வெளியில் சென்ற போது ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 500 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் பும்ரா இல்லாத நிலையில் முகமது சிராஜ் அந்தத் தொடரை இந்தியா சமன் செய்ய அதிக விக்கெட் கைப்பற்றி அசத்தியிருந்தார்.

இன்றைய போட்டியில் நியூசிலாந்து 70 ரன் எடுத்து ஐந்து விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. ஆனால் மேற்கொண்டு பழைய பந்தில் இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனது. இதனால் முதல் நாள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 243 ரன் எடுத்து வலிமையாக உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக முகமது சிராஜை விளையாடும் அணியில் தேர்வு செய்யாதது கம்பீர் செய்த மோசமான காரியம் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இதை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -