நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று ஆர்சிபி அணிக்கு எதிராக, லக்னோ அணியின் இளம் வேகப் ப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மணிக்கு 156.6 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்து வீசிய சாதனையை படித்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஷான் டைய்ட் 157.7 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது சாதனையாக இருக்கிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் சோயப் அக்பர் 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது உலகச் சாதனையாக இருக்கிறது.
இந்த வரிசையில் எடுத்துக் கொண்டால் சோயப் அக்தர், ஷான் டைய்ட், பிரட் லீ, ஜெப் தாம்சன், மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலும் அதற்கு மேலும் பந்து வீசியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வேகப்பந்து வீச்சில் மிகப்பெரிய லெஜன்ட் என்றாலும் கூட, இவர்களுடைய ஆரம்ப காலக்கட்டத்தில், வேகமாக வீசுகின்ற முயற்சியின் காரணமாக கட்டுப்பாட்டை இழந்திருக்கிறார்கள்.
இந்த இடத்தில்தான் இந்தியாவின் இளம் மயங்க் யாதவ் விதிவிலக்கானவராகவும் ஆச்சரியமானவராகவும் இருக்கிறார். ஏனென்றால் இவர் வேகத்திற்காக எந்த முயற்சி செய்தாலும், கட்டுப்பாட்டை இழப்பதில்லை. இதன் காரணமாக இவர் பந்தை எங்கு வீச வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த இடத்தில் வீசுகிறார். இவருடைய இந்தத் துல்லியம் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிரமத்தை உண்டாக்குகிறது.
இவரிடம் இருக்கும் சிறப்பு திறமை வேகம், கட்டுப்பாடு மற்றும் துல்லியம். இளம் பந்துவீச்சாளராக பெரிய மேடைக்கு வந்திருக்கும் இந்த நிலையிலேயே இவருக்கு இயல்பாக எல்லாம் சேர்ந்து அமைந்திருக்கிறது. இதுதான் உலகத்தின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக பெரிய லெஜெண்ட் வீரர்கள் இவரை அரிதான வீரராக பார்க்கிறார்கள்.
தற்பொழுது இவர் அதிகபட்சமாக ஐபிஎல் தொடரில் மணிக்கு 156.6 கிலோமீட்டர் வேகத்தில் வீசி இருக்கிறார். ஆனால் இவரால் சோயப் அக்தர் சாதனையையும் வேகத்தில் மிஞ்ச முடியும் என்று பிரட் லீ நம்புகிறார். ஒரு சின்ன மாற்றத்தை மட்டும் பந்துவீச்சில் செய்தால் இவரால் அந்த மாபெரும் இலக்கை உலக சாதனையை அடைய முடியும் என்று கருதுகிறார்.
இதையும் படிங்க :வாங்கற சம்பளத்துக்கு கொஞ்சமாவது பேட்டிங் பண்ணனும்.. டீம் நம்பிக்கையை கெடுக்கக்கூடாது – மனோஜ் திவாரி விமர்சனம்
இதுகுறித்து அவர் தொலைக்காட்சியில் விளக்கும் பொழுது, மயங்க் யாதவ் தலை கொஞ்சம் சரிந்து இருக்கிறது, தலை நிமிர்ந்து நேராக இருந்தால் அவரால் மணிக்கு இன்னும் நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர் கூடுதல் வேகத்தில் பந்தை வீச முடியும் என்று கூறியிருக்கிறார். 156.6 கிலோ மீட்டர் வேகத்துடன், இந்த மாற்றத்தையும் செய்து கூடுதலாக 5 கிலோமீட்டர் வேகத்தை அதிகரிக்க முடிந்தால், 161.6 கிலோமீட்டர் என்று வேகத்தில் புதிய உலக சாதனையை இவரால் படைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.