வினோதமான முறையில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்த பிரெண்டன் டெய்லர்

0
1335
Brendan Taylor

ஜிம்பாப்வே அணியை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி ஒரு டெஸ்ட் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதில் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டியயும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடங்கியது இப் போட்டியில் பங்களாதேஷ் அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது . இதன் இரண்டாம் போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் ஜிம்பாப்வே கேப்டன் பிரெண்டன் டெய்லர் வித்தியாசமான முறையில் அவுட் ஆகி தனது விக்கெட்டை இழந்துள்ளார் உள்ளார்.

ஹராரே மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய தொடங்கியது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஜிம்பாப்வே அணியை சரிவில் இருந்து மீட்க கேப்டன் பிரெண்டன் டெய்லர் களத்திற்கு வந்தார் . தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வந்த கேப்டன் பிரெண்டன் டைலர் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வினோதமான முறையில் ஹிட்-விக்கெட் அவுட் ஆகி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

- Advertisement -

25வது ஓவரை வீச ஷொரிபுல் இஸ்லாம் வந்தார் . அவரது ஓவரில் பௌன்சராக போடப்பட்ட பந்தை தேர்ட் மேன் திசைக்கு அடிக்க முயற்சி செய்தார் பிரெண்டன் டைலர். அப்போது பந்து பேட்டில் படமால் நேராக விக்கெட் கீப்பரிடம் சென்றது .பந்து விக்கெட் கீப்பரிடம் சென்று விட்டது எனக் கருதி பிரெண்டன் டெய்லர் ஷேடோ பேட்டிங் பிராக்டிஸ் செய்தார் . அப்போது அவரது பேட் ஸ்டம்ப்ஸ் தாக்கி பெய்ல்ஸ் கீழே விழுந்தது பீல்டிங்கில் நின்று கொண்டிருந்த இருந்த பங்களாதேஷ் வீரர் இதனை நடுவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் நடுவரோ மூன்றாம் நடுவரிடம் ஆலோசித்து பின் ஜிம்பாப்வே கேப்டன் பிரெண்டன் டெய்லர் இருக்கு ஹிட்-விக்கெட் மூலம் அவுட்டை வழங்கினார் .

பொதுவாக கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர் பந்து வீசும்போது பேட் அல்லது பேட்ஸ்மேன் ஸ்டம்பை தாக்கி பெய்ல்ஸ் கீழே விழும் பட்சத்தில் அவருக்கு ஹிட் விகெட் என்ற முறையில் அவுட் வழங்கப்படும். ஆனால் இம்முறை பந்து விக்கெட் கீப்பரிடம் சென்ற பின்பு ஹிட்-விக்கெட் அவுட் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக விளையாடி கொண்டிருந்த பிரெண்டன் டெய்லருடைய இந்த வித்தியாசமான விக்கெட் பங்களாதேஷ் அணிக்கு ஒரு போனஸ் ஆக அமைந்தது . டெய்லர் உடைய விக்கெட்டுக்கு பிறகு ஜிம்பாப்வே அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை சேகரித்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பங்களாதேஷ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றயது.