“டெஸ்டில் இந்த பையனுக்கு வாய்ப்பு தந்திருக்கனும்.. எதிர்கால லீடர் இவரு” – ஆஸி பிராட் ஹாக் பேச்சு

0
184
Hogg

தற்போது இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறது.

அடுத்த தொடரில் இதுவரையில் இரண்டு போட்டிகள் முடிவடைந்து இருக்க, முதல் போட்டியை இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வென்று இருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியில் பேட்டிங் யூனிட்டி அனுபவ வீரர்களான விராட் கோலி கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இல்லாமல் இருப்பதால், இந்திய பேட்டிங் யூனிட் பலவீனமாக காணப்படுகிறது.

கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக கில் மற்றும் ஸ்ரேயாஸ் இருவரும் தொடர்ந்து தடுமாறி வருகிறார்கள். இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்ஸில் கில் சதம் அடித்து ஓரளவுக்கு தப்பித்து இருக்கிறார்.

அதே சமயத்தில் ஸ்ரேயாஸ் தொடர்ந்து மோசமான பேட்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வருகிறார். இதன் காரணமாக அடுத்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருப்பாரா? என்பது குறித்து தெரியவில்லை.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறும்போது “கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி உடன் இருந்த திலக் வர்மாவுடன் கொஞ்சம் நேரம் செலவிட்டேன். அவர் அற்புதமான வீரர். அவர் தன்னுடைய பெல்டில் ரன்கள் குவிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த டெஸ்ட் தொடருக்கு அவரை தேர்வு செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இந்திய கிரிக்கட்டுக்கு எதிர்கால தலைவராக இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : “ஜோ ரூட்டை பற்றி யாரும் கவலை வேணாம்.. பாஸ்பால் தொடரும்” – மெக்கலம் உறுதியான பேச்சு

தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முறைக்கு ஸ்ரேயாஸ் ஐயர் பொருந்துவார் என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு ஷார்ட் பந்தில் இன்னும் பிரச்சனை தீரவில்லை. ஆனாலும் அவருக்கு இன்னும் ஒன்று இரண்டு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். பவுன்சர் விக்கெட்டுகளில் அவர் போராடுகிறார். இந்த இடத்தில்தான் ரகானே ஒரு வாய்ப்பை பெற முடியும்” என்று கூறியிருக்கிறார்.