டி20 உலக கோப்பையில் இந்த 4 டீம் தாங்க செமி பைனல் விளையாடும் என அடித்துக்கூறும் பிராட் ஹாக்

0
5519
Brad Hogg T20

20 ஓவர் உலக கோப்பையை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் அவ்வப்போது தங்களது கிரிக்கெட் வலுவான அணிகளையும் நுணுக்கங்களையும் தெரிவித்துக் கொண்டே வருகின்றனர் . பல அணிகள் தரமான ஓர் அணியை உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வலிமையான டி20 அணியை தேர்வு செய்த பிறகு தற்போது எந்தெந்த அணியலாம் செமி பைனல்ஸ் விளையாடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவிருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கொரோனா முதல் அலையின் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்க கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வேண்டிய 20 ஓவர் உலகக்கோப்பை கொரோனா சூழ்நிலையால் இந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டி20 உலககோப்பை அக்டோபர் 14 முதல் நவம்பர் 17 வரை இந்தியாவில் நடைபெறவிருந்த இத்தொடர் கொரோனா இரண்டாம் அலையின் காரனமாக ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மாற்றியமைக்கபட்டுள்ளது .என்பது அனைவரும் அறிந்ததே .

- Advertisement -
India vs England

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சமீபத்தில் கிரிக்கெட் தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்து வருகிறாதர். அப்போது வங்காளதேசத்திலிருந்து ஒரு ரசிகர் டி20 உலகக்கோப்பையில் எந்த அணிகள் எல்லாம் அரையிறுதி எட்டும் என டிவிட்டரில் பிராட் ஹாக்-இடம் கேட்டார் . அதற்க்கு பதிலளித்த பிராட் ஹோட்ஜ் “ இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதில் விளையாடுவார் என்று குறிப்பிடுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரரான இவர் தான் குறிப்பிட்டுள்ள அணியில் தன் தாய் நாடான ஆஸ்திரேலியாவிற்கே இடமில்லை . நடப்பு சாம்பியனான மேற்கிந்திய அணி டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றுள்ளது . சமீபத்தில் கூட ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலியாவிலேயே சம்பவம் செய்து தங்களது தரமான வருகையை எதிரணிகளுக்கு காட்டி வருகிறது.

டி20 உலக்கோப்பையை குறித்து இங்கிலாந்து அணியின்முன்னாள் வீரர் மைக்கல் வாகன் கூறுகையில்

- Advertisement -

அதே சமயம் இங்கிலாந்தும் தங்களது கெத்தை காட்டி வருகிறார்கள் . பாகிஸ்தான் தொடரின் மூலம் சில உயர்தர வீரர்களின் முழுத்திறமையை வெளி கொண்டி வந்துள்ளது . லியாம் லிவிங்க்ஸ்டன் ஆட்டம் இங்கிலாந்து அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அதிரடி சதம் அடித்தார் . இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு டி20 உலகக்கோப்பையை வெல்ல சிறந்த வழி கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்