“பாகிஸ்தானில் டேப்-பால் விளையாடும் சிறுவர்கள் மாதத்திற்கு 2 லட்சம் சம்பாதிக்கலாம்!” – ஹாரிஸ் ரவுப் கூறிய வியப்பான செய்தி!

0
422
Rauf

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகவும் கடினப்பட்டு மேலே வந்தவர்களில் சோயப் அக்தர் முக்கியமான ஒருவர். அவர் தனது வறுமையை வென்று பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு வந்து உலக கிரிக்கெட்டில் சாதித்தார்.

இவரைப் போலவே மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்து வந்து தனது அதிவேகத்தால் கிரிக்கெட் உலகில் தனக்கென தற்போது ஒரு இடத்தை பிடித்திருப்பவர் ஹாரிஸ் ரவுப்.

- Advertisement -

ஒரு ஓவரின் ஆறு பந்துகளையும் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய திறன் பெற்றிருக்கிறார். அதே சமயத்தில் பந்தை சரியான லைன் மற்றும் லென்த்தில் பேசக்கூடியவராகவும் இருக்கிறார். ஒரே நேரத்தில் வேகமும் கட்டுப்பாடும் இருக்கக்கூடிய அரிய வேகப்பந்துவீச்சாளர்.

தற்போது பாகிஸ்தான் அணியில் இளம் வேகபந்துவீச்சாளர் நஷீம் ஷா காயம் அடைந்துள்ள நிலையில் இவரது தேவை பாகிஸ்தான் அணிக்கு மிகவும் தேவையானதாக இருக்கிறது. இந்த நிலையில் தன்னுடைய சிறுவயதில் வறுமையால் பட்ட கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது “மெட்ரிகுலேஷன் முடிந்ததும் நான் என்னுடைய கட்டணத்தை செலுத்துவதற்காக சந்தையில் தின்பண்டங்களை விற்கும் வேலையை செய்தேன். மீதி நாட்களில் பள்ளிக்கு செல்வதும் கிரிக்கெட் விளையாட அகாடமிக்கு செல்வதுமாக இருந்தேன்.

- Advertisement -

நான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பொழுது என் தந்தை எனக்கு கட்டணம் செலுத்தும் அளவுக்கு சம்பாதிக்கவில்லை. ஆனால் நான் டேப் பால் கிரிக்கெட் விளையாடுவதின் மூலம் எனது கட்டணத்தை எளிதாக சமாளித்துக் கொள்வேன்.

பாகிஸ்தானில் தொழில் ரீதியாக டேப் பால் விளையாடும் சிறுவர்கள் மாதம் இரண்டு, இரண்டரை லட்சம் பணம் சம்பாதிக்க முடியும். நான் இதை என் தாயிடம் கொடுப்பேன். நான் இவ்வளவு சம்பாதிப்பது குறித்து என் தந்தையிடம் சொன்னது கிடையாது.

என் தந்தைக்கு மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். அனைவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். எனது தந்தைக்கு வீட்டில் ஒரு பெரிய அறை இருந்தது. என் தந்தையின் சகோதரர்களுக்கு திருமணம் நடந்த பொழுது, அவருடைய அறையை கூட அவர்களுக்கு கொடுத்து விட்டார். இறுதியில் நாங்கள் சமையலறையில் தூங்கும் நிலைக்கு வந்தோம்!” என்று கூறியிருக்கிறார்!