“கெயில் டிவில்லியர்ஸ் சாதிக்காததை பெங்களூர் அணிக்காக இந்த இளம் வீரர்கள் சாதித்துக் காட்டுவார்கள்” – பெங்களூர் அணி பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் பேட்டி!

0
313

இந்திய பிரீமியர் லீ கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்தப் போட்டி தொடரில் 33 போட்டிகள் முடிவடைந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் எட்டு புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன .

நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளை பெற்ற சென்னை முதலிடத்திற்கு முன்னேறியது .

- Advertisement -

நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது . இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் பெங்களூர் அணி வெற்றி பெற்று இருக்கிறது .

மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே பெங்களூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது . எப்போதும் பேட்ஸ்மேன் அணியாக பார்க்கப்படும் பெங்களூர் அணியில் இந்த முறை முகமது சிராஜ் ஹசரங்கா ஹர்சல் பட்டேல் என அணியின் அனைத்து முன்னணி பந்துவீச்சாளர்களும் திறமையாக செயல்பட்டு வருகின்றனர் .

இதற்கு முந்தைய போட்டியில் முஹம்மது சிராஜ் சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் ஹர்ஷல் பட்டேல் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் .

- Advertisement -

இந்தப் போட்டி பற்றி தனது கருத்தை பதிவு செய்திருக்கும் ஆகாஷ் சோப்ரா பெங்களூர் அணி இந்த முறை நிச்சயமாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என குறிப்பிட்டு இருக்கிறார். அதுவும் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் செல்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து பேட்டி அளித்திருக்கும் அவர் ” இந்த முறை பெங்களூரு அணியின் பலம் அவர்களது பந்துவீச்சு . இந்த முறை அவர்கள் கோப்பையை வெல்வார்களா என்றால் நிச்சயமாக அவர்களது பேட்டிங் சாதிக்காததை வந்து வீச்சு சாதிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது . பேட்ஸ்மேன்கள் உங்களுக்கு போட்டிகளை வெற்றி பெற்று தருவார்கள் ஆனால் பந்துவீச்சாளர்கள் உங்களுக்கு கோப்பைகளை வென்று தருவார்கள் என்ற பழமொழி உண்டு . அதுதான் தற்போது பெங்களூர் அணிக்கு நடக்க இருக்கிறது என்று அவர் கூறினார் .