இந்தியாவுல இவங்க ரெண்டு பேரும் வேற லெவல் பிளேயர்ஸ்.. அவங்க கிட்ட இத கத்துக்கணும்.. ஜோஸ் பட்லர் பேட்டி.!

0
695

இங்கிலாந்து அணியின் ஒரு நாள் மற்றும் டி20 கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஜோஸ் பட்லர். இவரது தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை கைப்பற்றியது. தற்போது உலகச் சாம்பியன் ஆன இங்கிலாந்து அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் தங்களது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள தயாராகி வருகிறது .

இதன் ஒரு பகுதியாக நியூசிலாந்து அணியுடன் நான்கு ஒரு நாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான t20 போட்டிகள் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 5ஆம் தேதி முடிவடைகிறது . மேலும் ஒரு நாள் போட்டிகள் செப்டம்பர் எட்டாம் தேதி துவங்கி 15 ஆம் தேதி முடிவடைகிறது.

- Advertisement -

ஒரு நாள் போட்டிகளில் சிறந்த அணியாக விளங்கும் இங்கிலாந்து அணிக்கு உலகச் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு ஓய்வை அறிவித்திருந்த அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பி இருப்பது மிகப் பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது . மேலும் அந்த அணியின் கேப்டன்னும் அதிரடி ஆட்டக்காரருமான ஜோஸ் பட்லர் இந்த முறையும் உலக கோப்பையை வென்று தங்களது அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார் .

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசியிருக்கும் அவர் உலக கிரிக்கெட் அணிகளில் தனக்கு பிடித்த வீரர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பகிர்ந்திருக்கிறார். கிரிக் மன்த்லி என்ற நிகழ்ச்சியில் பேசிய அவர் ” இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகியோரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் அவர்கள் இருவரது ஆட்டத்தையும் தான் மிகவும் ரசிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து விரிவாக பேசி இருக்கும் பட்லர் ” ரோஹித் சர்மாவின் புல் ஷாட் மிகச் சிறந்த ஒன்று என்று பாராட்டி இருக்கும் அவர், அந்த ஷாட்டை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டு ஆட முயற்சித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். அந்த ஷாட்டை ரோகித் சர்மா மிகவும் நேர்த்தியாக ஆடுவது பார்க்க அலாதியாக இருப்பதாக தெரிவித்திருக்கும் அவர் அவரைப் போலவே கற்றுக்கொண்டு ஆடி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

மேலும் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் பற்றி பேசி இருக்கும் அவர் ” ரிஷப் பண்டின் தனித்துவமான பேட்டிங் ஸ்டைல் மற்றும் ஆடுகளத்தில் அவர் காட்டும் தன்னம்பிக்கை ஆகியவை ரிஷப் பண்டிடம் மிகவும் பிடித்த விஷயங்கள் என்று கூறிய பட்லர் அவரது அசாதாரணமான தைரியத்தை கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். ஆட்டத்தின் எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடன் தைரியமாக ரிஷப் பிரண்ட் விளையாடும் விதம் அவரிடம் மிகவும் பிடித்த ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு இந்திய வீரர்கள் தவிர தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டன் டீக்காக் தனக்குப் பிடித்த மற்றொரு அதிரடி வீரர் என தெரிவித்திருக்கிறார் . அவரது பிக்கப் ஷாட்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்த அவர் அதுபோன்ற ஷாட்களை தானும் கற்றுக் கொண்டு விளையாட முயற்சிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுவரை 165 ஒருநாள் போட்டிகளில் விளையாடு இருக்கும் பட்லர் 4647 ரன்கள் எடுத்திருக்கிறார் இதில் 11 சதங்களும் 24 அரை சதங்களும் அடங்கும் . 106 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் பட்லர் ஒரு சதம் மற்றும் 20 அரை சதங்களுடன் 2713 ரன்கள் எடுத்துள்ளார்.