ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா இருவரும் சதம்… ஓபனிங் பார்ட்னர்ஷிப் ரெக்கார்ட்… 300+ ரன்களை கடந்த இந்தியா! – 2ஆம் நாள் முடிவில் என்னென்ன நடந்தது?

0
2685

ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இரண்டு துவக்க வீரர்களும் சதம் அடித்து அசத்தினர். இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் அடித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டாமினிக்காவில் நடைபெற்று வருகிறது.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸ் 150 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 5 விக்கெட்டுகள், ஜடேஜா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களா ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களம் கண்டனர். இந்த ஜோடி முதல் நாள் முடிவில் 80 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கியதில் இருந்து இருவரும் நேர்த்தியாக விளையாடி அரைசதம் கண்டனார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு அபாரமாக விளையாடி வந்த இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் 200 ரன்களை கடந்தது. இதில் ஜெய்ஸ்சுவால் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து பல்வேறு வரலாறுகளைப் படைத்தார். அறிமுக போட்டியில் சதம் விளாசிய மூன்றாவது இந்திய தொடக்க வீரர்கள் என்னும் பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

- Advertisement -

மறுபக்கம் தனது அனுபவத்தின் மூலம் அபாரமாக விளையாடி வந்த ரோகித் சர்மா டெஸ்ட் அரங்கில் பத்தாவது சதம் விலாசி அணியை இன்னும் வலுப்படுத்தினார். துரதிஷ்டவசமாக 103 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ரோகித் சர்மா வெளியேற, முதல் விக்கெட்டிற்கு ரோகித்-ஜெய்ஸ்வால் ஜோடி 229 ரன்கள் குவித்தது.

என்னால் மூன்றாவது இடத்தில் இன்னும் நன்றாக விளையாட முடியும் என்று கேட்டுக்கொண்டு களமிறங்கிய சுப்மன் கில் வெறும் ஆறு ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்து உள்ளே வந்த ரோகித் சர்மா நன்றாக விளையாடிய ஜெய்ஸ்வாலுடன் பாட்னர்ஷிப் அமைக்க தொடங்கினார்.

இரண்டாம் நாள் முடிவில் ஜெய்ஸ்வால் 143 ரன்கள், விராட் கோலி 36 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்திய அணி 312 ரன்கள் அடித்து இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது தற்போது வரை 162 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையிலும் இருக்கின்றது.

அறிமுகப் போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிக்கும் பட்சத்தில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வீரர் எவருமே அறிமுக போட்டியில் இரட்டை சதம் அடித்ததில்லை இந்த வரலாற்றை படைப்பார். தற்போது வரை 2013 ஆம் ஆண்டு அறிமுக போட்டியில் ஷிக்கர் தவான் 187 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தது அறிமுக போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்சமாக இருக்கிறது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக டெஸ்ட் தோல்வியே சிந்திக்கவில்லை என்பது கூடுதல் வரலாறு