ஆஸ்திரேலியாவில் எப்படி பந்து வீச வேண்டுமென பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் ஆகாஷ் தீப்பிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என இந்திய வீரர் புஜாரா அதிரடியாக விமர்சனம் செய்திருக்கிறார்.
இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பதிவு செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த போட்டியில் வெறும் 13 ஓவர்கள் மட்டுமே பங்கு பேசப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அச்சுறுத்தல் ஏற்படுத்த முடியாத பந்துவீச்சு
இன்று டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இந்திய அணி 13.2 ஓவர்கள் பந்து வீசிய பொழுது மழையின் காரணமாக போட்டியில் நிறுத்தப்பட்டது. அப்பொழுது ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பில்லாமல் 28 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 47 பந்தில் 19 ரன், மெக்ஸ்வீனி 33 பந்தில் 4 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்கள்.
இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் இன்றைய நாள் போட்டி அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. இந்திய அணி பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் 13 ஓவர்கள் பந்து வீசும் கூட ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இந்திய அணியின் பந்து வீச்சு திட்டம் சுமாராக இருந்ததையே இது காட்டுகிறது.
ஆகாஷ் தீப்பை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்
இதுகுறித்து விமர்சனம் செய்திருக்கும் புஜாரா கூறும் பொழுது “பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் ஆகாஷ் தீப்பிடம் இருந்து ஆஸ்திரேலியாவில் எப்படி பந்து வீச வேண்டும்? என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். இவர்கள் இருவரும் ஆறு மீட்டர் லென்த்தில் பந்து வீசினார்கள். இது பேட்ஸ்மேன்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அதே சமயத்தில் ஆகாஷ் தீப் 5 மீட்டர் நீளத்தில் பந்து வீசினார். இது பேட்ஸ்மேன்களை தொந்தரவு செய்தது. ஆஸ்திரேலியாவில் இந்த அளவில்தான் பந்து வீச வேண்டும்”
இதையும் படிங்க : 3வது டெஸ்ட் ஆரம்பத்திலேயே ரோகித் தப்பு பண்ணிட்டார்.. கம்மின்ஸ்க்கு பெரிய சந்தோசம் – மைக்கேல் வாகன் விமர்சனம்
“பெர்த் டெஸ்ட் போட்டியில் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் சரியான லென்த்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் அவர்கள் தற்போது சரியான லென்த்தில் பந்து வீசவில்லை. இந்தியாவின் 13 ஓவர்களை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். முதல் ஐந்து அல்லது ஆறு ஓவர்கள் பேட்ஸ்மேன்களை சோதிக்கவில்லை. ஆனால் இரண்டாவது பகுதியில் பந்துவீச்சில் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டது” என்று கூறியிருக்கிறார்.






