ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆரம்பத்திலேயே இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தவறு செய்து விட்டதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சனம் செய்திருக்கிறார்.
இன்று இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரஸ்பேன் மைதானத்தில் துவங்கியது. தற்போது அங்கு தொடர்ந்து மழை பெய்து வருகின்ற காரணத்தினால் போட்டி ஆரம்ப நிலையிலே தடைப்பட்டு நின்று இருக்கிறது.
இந்திய பிளேயிங் லெவனில் மாற்றங்கள்
இந்த போட்டியில் இந்திய அணியில் ஹர்ஷித் ராணா இடத்திற்கு ஆகாஷ் தீப் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்திற்கு ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். முதல் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்த வாசிங்டன் சுந்தரை தேர்வு செய்யாதது ஏன்? என தெரியவில்லை.
மேலும் இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதே சரியானதாக இருக்கும். இன்றைய போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சையை தேர்ந்தெடுத்தார். இருந்த போதிலும் இந்த முடிவை மைக்கேல் வாகன் விமர்சித்திருக்கிறார்.
கம்மின்ஸ் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்
இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது “டாஸ் தோற்றத்தில் கம்மின்ஸ் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். அந்த இடத்தில் அவர் முடிவு செய்ய வேண்டிய நிலையில் இல்லை. இந்த மைதானத்தின் புள்ளிவிபரங்கள் காரணமாக ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் இங்கு பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகள் இல்லை. மேலும் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்த பொழுதும் பெரிய மகிழ்ச்சி அடைந்திருப்பார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 212 டு 303.. சான்ட்னர் காட்டிய மாஸ்.. சவுதி கடைசி டெஸ்ட்.. மீண்டது நியூசி.. இங்கிலாந்து அணி சிறப்பான பவுலிங்
இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரண்டன் ஜூலியன் கூறும் பொழுது ” இங்கு முன்பிருந்தே அதிக மழை பெய்து வருகிறது. இங்கு வீரர்கள் பயிற்சிக்கு வந்த பொழுது ஆடுகளம் நல்ல பச்சையாக இருந்தது. ஆனால் போட்டி நாளில் பார்க்கும் பொழுது அப்படி பந்துவீச்சுக்கு சாதகம் தரக்கூடிய அளவில் பச்சையாக இல்லை. எனவே இங்கு முதலில் பேட்டிங் செய்வது சரியாக இருந்திருக்கும். இப்படியான நிலையில் டாஸ் தோற்பது நாம் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நம்மை தள்ளாது. எனவே டாஸ் தோற்பது நல்லது” என்று கூறியிருக்கிறார்.






