ரோகித் சர்மா முடியாது; ஆஸ்திரேலியா 2-1 என்று வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றும் – ஜெயவர்த்தனே கணிப்பு!

0
1042

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்று கணித்துள்ளார் மகிளா ஜெயவர்த்தனே.

வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியில் மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நாக்பூர் மைதானத்தில் துவங்குகிறது. மொத்தம் நான்கு போட்டிகள் இம்முறை நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் அடங்கியுள்ளன.

- Advertisement -

கடைசியாக 2017ஆம் ஆண்டு இந்தியாவில் விளையாடிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. மீதம் இருக்கும் போட்டிகளில் இந்திய அணி வென்று 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

அதன் பிறகு இரண்டு முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட 2015 ஆம் ஆண்டிலிருந்து இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி தொடரை கைப்பற்ற முடியாமல் ஆஸ்திரேலியா திணறுகிறது. 1969 மற்றும் 2004 ஆகிய இரண்டு முறை மட்டுமே இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இம்முறை பேட் கமெண்ட்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று பலமிக்க அணியாகவும் காணப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையில் இந்த டெஸ்ட் தொடரை யாரோ கைப்பற்றுவார் என்பதில் பலவேறு விவாதங்கள் மற்றும் கணிப்புகள் கூறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமான கணிப்பை கூறியுள்ளார் இலங்கை லெஜெண்ட் மகிளா ஜெயவர்த்தனே.

“இந்திய மைதானங்களின் கண்டிஷன் அறிந்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் தான் இந்த டெஸ்ட் தொடரின் சுவாரஸ்யம் இருக்கிறது. சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டிருக்கும் அவர்கள் பேட்டிங்கில் எப்படி செயல்படப் போகிறார்கள் என்பதை பார்ப்பதற்கு ஆர்வத்துடன் இருக்கிறேன்.

இந்த டெஸ்ட் தொடரில் யார் வெற்றி பெறுவார் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனாலும் ஒரு இலங்கை அணியை சார்ந்தவனாக இதை என்னால் செய்ய முடியும். என்னை பொறுத்தவரை, இரண்டு அணிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுவார்கள் என்று கணிக்கிறேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ரோகித் சர்மா எப்படி கேப்டன் பொறுப்பை வகிக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன்.” எனவும் பேசினார்.