50 ஓவர் உலக கோப்பையிலும் இதே ஆபத்து இருக்கு..! இந்தியாவின் பெரிய குறை

0
1854

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. பலம் குன்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா வீழ்த்தி விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 150 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் இந்தியா தோற்றுது.

இதில்  இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியது, இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ஆனால் இதைவிட இந்தியா தோல்வி தழுவியதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி சந்தித்த பிரச்சனை வரும் 50 ஓவர் உலகக் கோப்பையிலும் பிரதிபலிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 150 ரன்கள் என்ற இலக்கை இந்தியா துரத்தியபோது 113 ரன்களுக்கு ஐந்தாவது விக்கெட்டாக ஹர்திக் பாண்டியா இருந்தார்.

அப்போது பந்தும் விக்கெட்டுகளும் கையில் இருந்த நிலையில், இந்தியாவின் கீழ் வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அப்போது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த இயன் பிஷப், இந்தியாவில் பெரிய குறை ஒன்றை சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பேட்டிங் ஆழமாக இல்லை என்றும் வெறும் ஆறு வீரர்கள் தான்  பேட்டிங்கில் இருக்கிறார்கள் என்றும் அக்சர்பட்டேல் ஏழாவதாக வருகிறார்.

அவருக்கு பிறகு வேறு யாருக்குமே பேட்டிங் அவ்வளவாக வராது என்றும் இயன் பிஷப் சுட்டி காட்டினார். இதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒவ்வொரு அணியிலுமே குறைந்தபட்சம் எட்டு அல்லது ஒன்பது வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வரும்.

- Advertisement -

நேற்றைய ஆட்டத்தில் மட்டும் தீபக்சாகர் ,சர்துல் தாக்கூர் போன்ற ஆல் ரவுண்டர்கள் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணி இந்த இலக்கை எட்டி இருக்கும். ஆனால் இந்தக் குறையை இந்திய அணி சரி செய்யவில்லை. தற்போது 50 ஓவர் உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால் ஜடேஜா ஏழாவது வீரராக களமிறங்குவார்.

அவருக்கு அடுத்தது ஷமி, சிராஜ், பும்ரா, குல்திப் யாதவ் ஆகியோர்தான் இருப்பார்கள். இதன் மூலம் பெரிய இலக்கை துரத்தும் போது நிச்சயமாக அது இந்தியாவுக்கு மைனஸ் பாயிண்ட் ஆக இருக்கும். இதனால் பேட்டிங் தெரிந்த ஆல்ரவுண்டரை இந்திய அணி கீழ் வரிசையில் பயன்படுத்துவது அவசியமாகும்.ஆனால் கைவசம் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தற்போது சார்பில் தாக்குதல் மட்டும்தான் இருக்கிறார்.