ஐபிஎல் ஆடாமல் நாட்டுக்காக ஆடிய பங்களாதேஷ் வீரர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு

0
1126

2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பங்களாதேஷ் நாட்டைச் சார்ந்த முன்னணி வீரர்கள் ஆனா ஷாகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர் .

ஆனால் அவர்கள் இருவரும் இந்த ஐபிஎல் தொடர் முழுவதிலும் பங்கேற்கவில்லை . ஷகீப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஷகீப் அல் ஹசன் போட்டி தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறினார்.

- Advertisement -

லிட்டன் தாஸ் ஒரே ஒரு போட்டியில் மட்டும் பங்கேற்ற நிலையில் அயர்லாந்து அணிகளான போட்டி தொடர்களுக்காக நாடு திரும்பினார் . இதனால் அவர்களுக்கு பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது . தற்போது பங்களாதேஷ் நாட்டின் கிரிக்கெட் வாரியம் இதனை ஈடு செய்ய முடிவு செய்திருக்கிறது .

இது குறித்து பேசி இருக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜலால் ” பங்களாதேஷ் அணியின் மூத்த வீரர்களான ஷகீப் அல் ஹசன் லிட்டன் தாஸ் மற்றும் தஸ்கின் அகமது ஆகிய மூன்று வீரர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்க பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் .

இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் பங்களாதேஷ் அணியின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் பங்களாதேஷ் அணிக்காக விளையாடியதை சிறப்பிக்கும் வகையில் இந்த தொகை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் .

- Advertisement -

ஷகீப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர் . தஸ்கின் அகமது நேரடியாக ஐபிஎல் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் காயம் அடைந்த வீரருக்கு மாற்று வீரராக அழைக்கப்பட்டார் . ஆனாலும் அவர் தேசிய அணிக்கு விளையாடுவதற்காக ஐபிஎல் வாய்ப்பை ஏற்கவில்லை .

இதனைத் தொடர்ந்து இந்த மூன்று வீரர்களுக்கும் இழப்பீடாக 65,000 அமெரிக்க டாலர்களை வழங்கி இருக்கிறது பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம்,. இதுகுறித்து பேசி இருக்கும் ஜலால் ” கிரிக்கெட் வீரர்கள் நாட்டிற்காக ஆடுவதுதான் பெருமை என்றாலும் அவர்களது நலன் மற்றும் பொருளாதாரம் மேம்பாடுகளையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்தத் தொகை மிகச் சிறிய அளவே இருந்தாலும் அவர்கள் நாட்டிற்காக செய்த செயலை பாராட்டி அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்