அப்போ கப்ல இந்தியா பேர எழுதிருவோமா?… முக்கிய ஆஸ்திரேலியா வீரர் விலகல் …. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் திடீர் திருப்பம்!

0
1119

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற புதன்கிழமை இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்த போட்டிக்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன .

2021-23 ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக இரு அணிகளும் மும்முரமாக தயாராகி வரும் நிலையில் சில முக்கிய வீரர்களின் காயம் இரு அணிகளையுமே பாதித்திருக்கிறது .

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே தாயும் காரணமாக விலகி இருந்த நிலையில் இந்திய அணியின் முக்கிய வீரரான கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து விலகினார் .

இதனைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர் ஒருவர் ஐபிஎல் போட்டி தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக விலகி இருக்கிறார் . இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது .

ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் ஜோஸ் ஹேசல்வுட். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் சிறந்த விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளராக திகழ்ந்து வருபவர் . கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது காயம் காரணமாக பங்கேற்கவில்லை . அதன் பிறகு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற இவர் ஐபிஎல் போட்டியின் போது காயம் அடைந்தார் . ஆர்சிபி அணிக்காக ஆடிய இவர் இறுதியாக நடைபெற்ற சில போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்தக் காயம் காரணமாக தற்போது நடைபெற இருக்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஜோஸ் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் தெரிவித்துள்ளார் .

இவருக்கு மாற்று வீரராக வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் ஹேசல்வுட் 232 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . 67 ரன்களை கொடுத்து ஆரு விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். இவருக்கு பதிலாக அணியில் இடம் பெற்றிருக்கும் நெசர் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது . 2021 ஆம் ஆண்டின் ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது டெஸ்ட் வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது . இதுவரை இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடு இருக்கும் மைக்கேல் நெசர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதோடு 56 ரன்களையும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -