சாய் சுதர்சனுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்.. இங்கிலாந்து கவுண்டி அணியில் வாய்ப்பு.. 21 வயதில் சாதனை.!

0
624

தமிழக அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் விளையாடிய இவர் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் அணிக்காக அறிமுகமாகி ரசிகர்களால் அறியப்பட்டவர்.

2022-23 ஆண்டிற்கான விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எட்டு போட்டிகளில் விளையாடி 610 ரன்கள் குவித்தார். மேலும் அந்தப் போட்டி தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பெற்றார் . இதில் மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும். இதனைத் தொடர்ந்து தமிழக அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார்.

- Advertisement -

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 96 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடிய அவர் 507 ரன்கள் குவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடிய இவர் பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் எடுத்தார்.

இந்த வருடம் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவருக்கு தற்போது மிகப்பெரிய அங்கீகாரம் ஒன்று கிடைத்திருக்கிறது. இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டின் நடப்புச் சாம்பியன் சர்ரே அணிக்கு விளையாடுவதற்காக சாய் சுதர்சனக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 21 வயதிலேயே அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

தற்போது இங்கிலாந்து நாட்டில் 2023 ஆம் ஆண்டிற்கான கவுன்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏ டிவிஷன் பிரிவில் விளையாடி வருகிறது சர்ரே அணி. மேலும் அந்தப் பிரிவில் முதலிடமும் வகுத்து வருகிறது. இந்த அணியில் வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்று விட்டார். மேலும் ஆல்ரவுண்டர் சாம் கரன் மற்றும் துவக்க ஆட்டக்காரர் வில் ஜேக்ஸ் ஆகியோர் இங்கிலாந்தின் டி20 அணியில் இடம் பெற்று இருப்பதால் கவுண்டி போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக அந்த அணியின் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடுவதற்கு தமிழக வீரரான சாய் சுதர்சனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது . இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சர்ரே அணியின் டைரக்டர் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான அலெக்ஸ் ஸ்டீவர்ட் ” சாய் சுதர்சனை எங்கள் அணியில் சேர்த்ததற்கே எனது மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கக் கூடிய இந்தியாவைச் சார்ந்த இரண்டு கிரிக்கெட் லெஜென்ட்கள் சாய் சுதர்சனை எனக்கு பரிந்துரை செய்தனர் . அவர்கள் சாய் சுதர்சன உடன் பணியாற்றியும் இருக்கின்றனர்” என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து பேசி இருக்கும் அவர்” எங்களது ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சாய் சுதர்சனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். எங்கள் அணியின் பேட்டிங் யூனிட்க்கு அவர் மிகப்பெரிய பலமாக இருப்பார்” என தெரிவித்துள்ளார். கடந்த முறையும் சர்ரே அணிதான் கவுண்டி சாம்பியன்ஷி பட்டத்தை டிவிசன் ஏ பிரிவில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீதி இருக்கும் ஒன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணிக்கு அறிமுகமாகாமல் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிய திறமையின் மூலமே கவுண்ட்டி வாய்ப்பை சாய் சுதர்சன் பெற்று இருக்கிறார் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.