நடராஜன் அமைதியான பையன்தான்.. ஆனா உண்மையில் வேற மாதிரி – புவனேஸ்வர் குமார் பேட்டி

0
6689
Natarajan

இன்று ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஹை-கோரிங் போட்டியாக நடைபெற்றது. ஆனாலும் ஹைதராபாத் தரப்பில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் நடராஜன் இருவரும் மிக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார்கள். இதில் நடராஜன் குறித்து புவனேஸ்வர் குமார் பாராட்டி பேசி இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணிக்கு ஹெட்32 பந்தில் 89 ரன்கள், அபிஷேக் ஷர்மா 12 பந்தில் 46 ரன்கள், ஷாபாஷ் அகமத் 29 பந்தில் 59 ரன்கள் என அதிரடியாக ரன் குவித்தார்கள். ஹைதராபாத் மணி 20 ஊர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ஜாக் பிரேசர் மெக்கர்க் 18 பந்தில் 61 ரன்கள், கேப்டன் ரிஷப் பண்ட் 35 பந்தில் 44 ரன்கள் எடுத்தார்கள். டெல்லி அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹைதராபாத் அணி ஏழாவது போட்டியில் ஐந்தாவது வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. இந்த போட்டியில் நடராஜன் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டும் விட்டு தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

போட்டி முடிவுக்கு பின் பேசிய ஹைதராபாத் அணியின் புவனேஸ்வர் குமார் “நாங்கள் இவ்வளவு பெரிய ரன்களை அடித்திருக்கும் பொழுது, பந்துவீச்சில் நாங்களும் ரன்கள் கொடுப்போம் என்பதை ஒப்புக் கொண்டோம். நாங்கள் எங்கள் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முடிவு செய்தோம். மேலும் நாங்கள் விக்கெட்டை கைப்பற்றுவதன் மூலம் எங்கள் வழியில் ஆட்டம் வரும் என்று தெரியும்.

நடராஜன் நடராஜன் மிகவும் அமைதியான ஆனால் கடினமாக உழைக்கும் பையன். அவர் உண்மையில் ஒரு மேட்ச் வின்னர். அவரிடம் எவ்வளவு சிறப்பான யார்க்கர்கள் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியும். ஐபிஎல் தொடரில் பல வருடங்களில் ஹைதராபாத் அணியின் பேட்டிங் யூனிட் இவ்வளவு கிளிக் ஆவது இதுவே முதல் முறை. ஒரு பவுலிங் யூனிட் ஆகவும் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 220 முதல் 230 ரன்கள் இருந்தால் எங்களுக்கும் அழுத்தம் இருக்கும். ஆனால் எங்கள் பேட்டிங் யூனிட் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : நான் போட்ட ஒரு தப்பு கணக்கு.. அதுதான் எங்க தோல்விக்கு காரணம் – கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டி

கண்டிஷன்கள் முக்கியம் கிடையாது. ஏனென்றால் நாங்கள் வலைகளில் இதையே பயிற்சி செய்கிறோம். அதே சமயத்தில் வலையில் பந்து எங்கு போகிறது என்பது குறித்து கவலை கிடையாது. ஆனாலும் எங்களுக்கு ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா மூலம் நல்ல பயிற்சி கிடைக்கிறது. பேட்டிங் ஸ்பான்சர்ஷிப்பை வெல்லும் ஆனால் பவுலிங் சாம்பியன்ஷிப்பை வெல்லும் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இது சிறந்த வாசகம். நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதம் அருமை” என்று கூறியிருக்கிறார்.