“கில் விளையாட வாய்ப்பு இருக்கா?”.. குட் நியூஸ்.. பல கேள்விக்கு ரோகித் சர்மா வெளிப்படையான பதில்!

0
1437
Rohit

நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவதற்கு இந்தியா பாகிஸ்தான் இரண்டு அணிகளும் தீவிரமான பயிற்சியில் அங்கு ஈடுபட்டு வருகிறார்கள்!

சிலநேரத்திற்கு முன்பு மாலை நேர பயிற்சியில் இந்திய வீரர்கள் அனைவரும் ஈடுபட்டு இருந்தார்கள். மேலும் அணியின் வீரர்கள் ஆடுகள தயாரிப்பு எப்படி இருக்கிறது என்று பார்வையிட்டார்கள்.

- Advertisement -

இதில் மேலும் ஒரு நல்ல விஷயமாக இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து வந்து ஆடுகளத்தை பார்வையிட்டதோடு, சிறு சிறு உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நேற்று பயிற்சியிலும் ஈடுபட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய போட்டிக்கு முன்பாக இரண்டு அணியின் கேப்டன்களும் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்கள். முதலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களை எதிர் கொண்டார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியிடம் வென்றதில்லை என்ற சாதனையை மாற்றி அமைப்போம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை எதிர்கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு தன்னுடைய பாணியில் பதில் அளித்தார். மேலும் சுப்மன் கில் நாளைய ஆட்டத்தில் விளையாடுவாரா என்பதற்கு வெளிப்படையான பதிலையே கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “கடந்த 9 மாதங்களாக நான் சமூக வலைதளத்தில் இல்லை. இது போன்ற விஷயங்களை சமாளிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக எங்களுக்கு இது மிகப்பெரிய ஆட்டம். கடந்த இரண்டு ஆட்டங்களில் நாங்கள் சிறப்பாக செய்துள்ளோம். அதை மேற்கொண்டு தொடர்வோம்.

இந்தியாவின் சிறந்த தரம் என்னவென்றால் நாங்கள் எந்த மாதிரியான ஆடுகளத்திற்கும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு விளையாடுவோம்.

மேற்கொண்டு பாகிஸ்தான் இந்தியாவுடன் உலகக் கோப்பையில் வென்றதில்லை போன்ற புள்ளி விவரங்களை எல்லாம் நான் பார்ப்பது கிடையாது. நாங்கள் எப்படி நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும் என்பதில் மட்டுமே என்னுடைய கவனம் உள்ளது.

நாளை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் களம் இறங்குவதற்கு 99 சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன!” என்று இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் நம்பிக்கையான பேச்சை வெளிப்படுத்தி இருக்கிறார்!