“உலக கிரிக்கெட்ல இப்ப இந்த இந்திய வீரர் மாதிரி ஒருத்தர காட்டுங்க பாக்கலாம்!” – ஹர்பஜன் சிங் வெளிப்படையான சவால்!

0
703
Harbhajan

ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி செல்வதற்கு முன்னால், இந்திய அணியின் பிளேயிங் லெவனின் யாரை வைத்து விளையாடுவது? என்கின்ற குழப்பம் இருந்தது. தற்போதும் அதே குழப்பம்தான் இருக்கிறது. ஆனால் இரண்டும் வேறு வேறு மாதிரியானது!

ஆசியக் கோப்பைக்கு முன்னால் இந்திய அணி வீரர்கள் குறித்த சந்தேகம் இருந்ததால் யாரை வைத்து விளையாடுவது? என்கின்ற கேள்வி இருந்தது. முக்கிய வீரர்களின் காயம் இந்திய அணி மீதான பல சந்தேகங்களை அப்பொழுது உருவாக்கி இருந்தது.

- Advertisement -

ஆசியக் கோப்பைக்கு பின்பாக இந்திய அணியில் வாய்ப்பு பெறும் அத்தனை வீரர்களும் மிகச்சிறப்பாக செயல்படுவதால், யாரை வைத்து விளையாடுவது என்கின்ற குழப்பம்? நல்ல குழப்பமாக மாறி இருக்கிறது. தற்பொழுது பிளேயிங் லெவனில் யாருக்கு எந்த இடத்தை கொடுப்பது என்கின்ற சிக்கல் தொடர்கிறது.

இந்திய அணியில் தற்போது சூரியகுமார் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். மேலும் முகமது சமி பந்துவீச்சில் அசாதாரணமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இவர்கள் இருவரையும் அணியில் யாருக்கு பதிலாக எந்த இடத்தில் வைப்பது? என்கின்ற குழப்பம் நீடிக்கிறது.

முகமது சமி பந்துவீச்சை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால், அவர் பந்தின் தையலை செங்குத்தாகப் பிடித்து பேசக்கூடியவர். இது அப்ரைட் சீம் எனப்படும். சீம் என்பது பந்தின் தையல்.

- Advertisement -

கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்களுக்கு பந்தின் தையல் என்பது மிக முக்கியமான விஷயம். இதை எப்படி பயன்படுத்தி வீசுகிறார்கள்? என்பதில்தான் ஒவ்வொருவரின் திறமையும் அடங்கி இருக்கிறது. தையல் இல்லாமல் பந்துவீச்சு கிடையாது!

இந்த நிலையில் முகமது சமி பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் “முகமது சமி மீண்டும் ஒருமுறை புத்திசாலித்தனமாகச் செயல்பட்டார். அவருடைய சீம் பொசிஷனை பாருங்கள். அது மிகவும் நேராக இருக்கும். தற்பொழுது இவரை போல் யாரும் பந்துவீச்சில் சிறந்த சீm பொசிஷனை கொண்டிருக்க மாட்டார்கள்.

இந்திய கிரிக்கெட் இந்தக் கட்டத்தில் மிகவும் அதிர்ஷ்டம் செய்த ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் சமி, பும்ரா சிராஜ் ஆகியோர் அணியில் இருக்கிறார்கள். இவர்களால் பந்தை வேகமாகவும் வீச முடியும். அதே சமயத்தில் இவர்களுடைய நாளில் தனி ஆளாக ஆட்டத்தை வெல்லவும் முடியும்!” என்று கூறியிருக்கிறார்!