“சர்பராஸ்கான் பற்றி மும்பை வீரர்கள் சொன்னாங்க.. அப்பதான் அந்த முடிவை எடுத்தேன்” – ரோகித் சர்மா பேட்டி

0
678
Rohit

இந்திய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கடந்த மூன்று சீசன்களாக மிகப்பெரிய அளவில் ரன்கள் குவித்து பல சாதனைகளை சர்ப்ராஸ் கான் செய்திருந்தார்.

ஆனாலும் அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படுவது மறுக்கப்பட்டே வந்தது. இந்திய கிரிக்கெட்டின் சஞ்சு சாம்சனுக்கு அடுத்து சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்கப்படாதது பற்றி நிறைய பேச்சுகள் இருந்தது.

- Advertisement -

விராட் கோலி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடாத போதும் கூட, முதலில் ரஜத் பட்டிதாருக்குதான் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவரை விட பல மடங்கு ரன்கள் குவித்திருந்த இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கேஎல்.ராகுலும் காயமடைய, மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் ஃபார்ம் சரியில்லாமல் போக, சர்பராஸ் கானுக்கு முதல் வாய்ப்பு கிடைத்ததோடு விளையாடுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த இந்த வாய்ப்பை தனது அறிமுக போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அதிரடியாக அரைசதங்கள் அடித்து கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார் சர்ப்ராஸ் கான். அவரின் பேட்டிங் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது.

- Advertisement -

சர்பராஸ் கான் பற்றி பேசி இருக்கும் ரோகித் சர்மா கூறும் பொழுது “சர்பராஸ் கான் அந்த அளவிற்கு பேட்டிங் செய்வதை பார்க்கும் வாய்ப்புகள் எனக்கு இல்லை. அவர் மும்பையை சேர்ந்த வீரர். மேலும் பல கடினமான சூழ்நிலைகளில் மும்பை அணிக்கு நிறைய ரன்களை குவித்திருக்கிறார் என்று தெரியும்.

இதையும் படிங்க : “ஜெய்ஸ்வால் இளம் சச்சின் போல இருக்கிறார்.. பேட்டிங்கால் கிடையாது.. இதனால்தான்” – ரவி சாஸ்திரி பேச்சு

நாங்கள் சர்பராஸ் கானுக்கு எந்த திட்டத்தையும் தனிப்பட்ட முறையில் கொடுக்கவில்லை. ஏனென்றால் மும்பையைச் சேர்ந்த வீரர்கள் என்னிடம் அவரை அவருடைய போக்கில் விட்டுவிட்டால் அவரே பார்த்துக் கொள்வார் என சொல்லியிருந்தார்கள். அதனால் அவரை விளையாட அப்படியே விட்டு விட்டோம்” எனக் கூறியிருக்கிறார்.