“இவருக்கு நிகரான வீரர் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே”! – ஹர்பஜன் சிங் இந்திய வீரருக்கு புகழாரம்!

0
1260

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது . கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது .

உஸ்மான் கவஜா மற்றும் பீட்டர் ஹான்ஸ்கம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . இதனைத் தொடர்ந்து தங்களது முதலில் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 262 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது அக்சர் பட்டேல் சிறப்பாக ஆடி 74 ரன்கள் எடுத்தார் . இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது ஆஸ்திரேலிய அணி 61 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது .

- Advertisement -

ஆனால் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது போட்டியின் நிலைமை தலைகீழாக மாறியது ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் துள்ளிய பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஆட்டம் இழந்து வெளியேறினர் . மூன்றாம் நாள் காலையில் உணவு இடைவேளைக்கு முன்பாகவே 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா . ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 42 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து ஜாம்பவான் ஹர்பஜன் சிங் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை வெகுவாக பாராட்டி இருக்கிறார் . இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” ரவீந்திர ஜடேஜாவின் திறமைகளை யாரும் கேள்வி கேட்க முடியாது . வழக்கம் போலவே பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டார் . மேலும் பேட்டிங்கின் போதும் விராட் கோலியுடன் இணைந்து முக்கியமான தருணத்தில் சிறப்பாக ஆடினார் . அவர் தற்போது இருக்கும் பார்மிற்கு நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களம் இறக்கினால் கூட இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்குவார் என நான் கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் இதைப்பற்றி தொடர்ந்து பேசிய ஹர்பஜன் ” தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகின் சிறந்த ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தான் . அவருடன் ஒப்பிட தகுதியான நபர் பென் ஸ்டோக்ஸ் மட்டும்தான் என நான் நினைக்கிறேன் என்று கூறினார் . மேலும் டெல்லியில் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு மிக அற்புதமாக இருந்தது . விக்கெட்டுகளை நோக்கி பந்தை வீசும் தன்னுடைய துல்லிய தன்மையில் அவர் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவே இல்லை . பந்து தாழ்வாக எழும் ஆடுகளங்களில் ஸ்டம்புகளை நோக்கி பந்தை வீசுவது நல்ல பலன் அளிக்கும் என்பதை ஜடேஜா மிகச் சரியாகப் பயன்படுத்தினார் என பாராட்டினார் ஹர்பஜன் .

மேலும் அவரது காயம் பற்றி பேசுகையில் ” ரவீந்திர ஜடேஜா மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டது அவருக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கிறது . அறுவை சிகிச்சைகளின் காரணமாக பந்துகளை துல்லியமாக வீசும் போது அவர் எந்தவிதமான வலியையும் உணரவில்லை . இது தொடர்ச்சியாக ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்க உதவியதாக நினைக்கிறேன்”என்று கூறி முடித்தார் .

இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 17 விக்கெட்களை ரவீந்திர ஜடேஜா கை போட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஜடேஜா இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இரண்டாவது இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் .̓

- Advertisement -