நீ தான் யா உண்மையான ஆல் ரவுண்டர்.. 148 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது வீரர்.. இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ்

0
124

இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் சதம் விளாசி அசத்தி இருக்கின்றார்.  ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஏற்கனவே இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் மட்டும் தான் வென்றிருக்கிறது.

நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி மீண்டும் அதில் ஆதிக்கம் செலுத்த வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து அணி கேப்டன் தாம் ஏன் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கின்றார்.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் சதம்:

ஏற்கனவே பந்துவீச்சில் ஐந்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியை 358 ரன்களில் சுருட்டினார். இந்த தருணத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் ரன் குவித்து வந்தாலும் இந்தியாவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவ வைக்க பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் பேட்டிங்கில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகின்றார். சிறப்பாக விளையாடிய அவர் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்து இருக்கின்றார். இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 600 ரன்கள் மேல் குவித்து இருக்கின்றது.

- Advertisement -

வரலாற்று சாதனை படைத்த ஸ்டோக்ஸ்:

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் மற்றும் பேட்டிங்கில் சதம் விளாசிய ஒரே இங்கிலாந்து கேப்டன் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்திருக்கின்றார். அது மட்டும் அல்லாமல் 148 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய சாதனையை படைத்த ஐந்தாவது ஆல்ரவுண்டர் என்று பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

இதையும் படிங்க: டெஸ்ட் கோச்சாக கம்பீருக்கு தகுதி இல்ல.. அஸ்வின் வெளிப்படுத்தும் முக்கிய காரணங்கள்.. எங்கே தவறு நடந்தது?

மேலும் பென் ஸ்டோக்ஸ் இந்த இன்னிங்ஸ் விளையாடியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏழாயிரம் ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் பென் ஸ்டோக்ஸ் பெற்று இருக்கிறார். இதேபோன்று இந்திய அணியும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 30-வது முறையாக எதிர் அணியை 600 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டு இருக்கிறது.

- Advertisement -