டெஸ்ட் கோச்சாக கம்பீருக்கு தகுதி இல்ல.. அஸ்வின் வெளிப்படுத்தும் முக்கிய காரணங்கள்.. எங்கே தவறு நடந்தது?

0
186
Gambhir

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கம்பீர் தகுதி ஆனவரா? என்கின்ற விவாதங்கள் கிரிக்கெட் உலகில் அதிகரித்திருக்கிறது. இங்கிலாந்து தொடரில் கம்பீர் எடுத்துள்ள முடிவுகள் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

மேலும் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது மாறி இருக்கும் இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு எப்படியான அணியை தேர்வு செய்திருக்க வேண்டும்? என்பது குறித்து சரியான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் மீதான சுமை

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எடுப்போம் முடிவுகள் வித்தியாசமானதாகவும் வீரியமானதாகவும் இருக்கிறது. மேலும் அவர் பொறுப்பேற்ற முதல் ஐசிசி தொடரிலேயே இந்திய அணி சாம்பியன் பட்டத்தை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வென்றது.

அதே சமயத்தில் இந்திய டெஸ்ட் அணி முதல்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக தொடரை வாஷ் அவுட் முறையில் இழந்து அதிர்ச்சி அளித்தது. தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தடுமாறி வருகிறது.

- Advertisement -

கம்பீர் என்ன தவறு செய்கிறார்?

டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரையில் 500 ரன்கள் எடுப்பதை விட எதிரணியில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றும் பொழுதுதான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் கம்பீர் தொடர்ந்து தற்காப்பாக பேட்டிங் பலத்தை அதிகரிக்கவே பார்க்கிறார். இதன் காரணமாக குல்தீப் யாதவ் போன்ற தாக்குதல் பந்துவீச்சாளரை அணியில் சேர்க்க முடியாமல் போகிறது. இது இங்கிலாந்து அணி பெரிய அளவில் ரன் குவிக்க உதவுகிறது.

இதையும் படிங்க : தம்பி காம்போஜ் உன்ன விட கும்ப்ளே வேகமாக வீசுவார்.. கில் முதல்ல ஒரு கேப்டனா.. என்னப்பா நடக்குது? – சித்து விமர்சனம்

மேலும் இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங் செய்ய சாதகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விக்கெட் வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர்களின் தேவை அதிகரிக்கிறது. இதைப் பற்றி ரவிச்சந்திரன் அஸ்வின் விரிவாக பேசியிருக்கிறார். ஆனால் கம்பீர் தொடர்ந்து பவுலிங் யூனிட்டை பலப்படுத்தாமல் பேட்டிங் யூனிட்டை பலப்படுத்தி தோல்விகளை சந்திக்கிறார். இது டி20 வடிவத்திற்கு சரியான அணுகுமுறையாக இருக்கிறது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரியானதாக இல்லை. எனவே வெளியில் இருந்து கம்பீர் இந்திய டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு தகுதியானவர் இல்லை என விமர்சனங்கள் வர ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -