இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக உயர்ந்த உடனே 2 அதிரடி முடிவை எடுத்துள்ள பென் ஸ்டோக்ஸ் ; புதிய பயிற்சியாளரும் அறிவிப்பு

0
3061
Ben Stokes and Joe Root

உலக கிரிக்கெட்டில் அசுரத்தனமாய் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆதிக்கம் செய்துகொண்டிருந்த ஆஸ்திரேலியா அணியை, 2005 ஆஷஸ் தொடரில் உள்நாட்டில் வைத்து, மைக்கேல் வாகனின் இங்கிலாந்து அணி மணி கட்டியதோடு, 2011 ஆஷஸ் தொடரில் ஆன்ட்ரூ ஸ்டிராஸ் தலைமையில் ஆஸ்திரேலியாவில் வைத்தும் அடக்கிக் காட்டியது.

ஆன்ட்ரூ ஸ்டிராஸ் கேப்டன் பொறுப்பிலிருந்து விடைபெற அலைஸ்டர் குக் கேப்டன் பொறுப்பிற்கு வந்த பிறகும் இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. ஆனால் 2013-14 ஆஸ்திரேலியாவில் நடந்த ஆசஷ் தொடரை 5-0 என்று மரண அடிவாங்கி இழந்தது இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பெரிய சரிவையே உண்டாக்கிவிட்டது.

- Advertisement -

அந்த தொடரில் மெல்ல மெல்ல உண்டான சரிவு, அலைஸ்டர் குக் ஓய்வுபெற்று, ஜோ ரூட் கேப்டனான பிறகு இன்னும் அதிகரித்தது. அவர் கேப்டனாக பொறுப்பேற்ற 64 போட்டிகளில் 27ல் வெற்றி, 26ல் தோல்வி, 11 ஆட்டம் சமன் ஆகியுள்ளது. கடைசி இருவருடங்களில் அவரது டெஸ்ட் கேப்டன்சியின் கீழ் இங்கிலாந்து அணி மிகவும் பரிதாபமான நிலையில் இருந்தது. ஆனால் ஜோ ரூட்டின் பேட்டிங் அற்புதமாகவே இருந்தது. கவுண்டி அணிகள் டெஸ்ட் போட்டிக்கான வீரர்களைச் சரியாக உருவாக்குவதில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த ஐ.பி.எல் தொடரில் கலந்துகொள்ள முடியாதென்று பென் ஸ்டோக்ஸ், சாம் கரன் தெரிவித்திருந்தனர்!

இந்த நிலையில் சமீபத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி இருந்தார் ஜோ ரூட். தற்போது ஐ.பி.எல் குஜராத் அணியின் பயிற்சியாளராக இருக்கும் செளத் ஆப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் இங்கிலாந்தின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்க உள்ளதாகச் செய்திகள் வருகிறது. ஐ.பி.எல் தொடர் முடிந்து இங்கிலாந்து அணியோடு இணைய உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் தான் கேப்டன் பொறுப்பேற்க தயாரென்றும் ஆனால் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சன் திரும்ப அணிக்குள் வரவேண்டுமென்று பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிகிறது!